search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Chepauk"

    • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி சென்னை- பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
    • பெண்களுக்கு தனி வரிசை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆன்லை மூலமாகவும், மைதானத்திலும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்த வண்ணம் உள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால், முந்தைய போட்டிக்கான டிக்கெட்டுகள் வினியோகம் செய்யும்போது பெண்களுக்கு தனி வரிசை இல்லை எனவும், ஆண்களுடன் போட்டிபோட்டு டிக்கெட்டுகளை வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும் பெண்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் பெண்களுக்கு தனி வரிசை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

    இந்த நிலையில், பெண் கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையை தொடர்ந்து சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கு தனிவரிசையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையில் மே 12-ந்தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #IPL2019 #CSK #ChennaiChepauk
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது.

    கடந்த ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியதால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 5-ந் தேதி வரை இரண்டு வார காலத்துக்கு மட்டுமே ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் ‘லீக்‘ அட்டவணைகளின் முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மே 5-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று போட்டி நடைபெறும் தேதி, இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் தெரிவித்து உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 19-ந் தேதிவரை நடக்கிறது. இதை பாதிக்காத வகையில் ஐ.பி.எல். அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா அணிகளும் தங்களது சொந்த மண்ணில் 7 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை.

    மேற்கு வங்காளத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனால் கொல்கத்தா நைட்ரைடரில் ஈடன்கார்டன் மைதானத்தில் மோதும் ஆட்டங்கள் அதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது.

    ‘பிளே ஆப்’ சுற்று ஆட்டங்கள் விவரம் அறிவிக்கப்படாவிட்டாலும் இறுதிப் போட்டி சென்னையில் மே 12-ந்தேதி நடைபெறும் என்று தெரிகிறது. நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    பிளேஆப் சுற்றில் ‘குவாலிபையர்-1’ ஆட்டம் மே 7-ந்தேதியும், ‘எலிமினேட்டர்’ மே 8-ந்தேதியும், ‘குவாலிபையர்-2’ மே 10-ந்தேதியும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். ஆட்டங்களில் ஏதாவது நகரங்களில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் மாற்று இடமாக விசாகப்பட்டினத்தை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. #IPL2019 #CSK #ChennaiChepauk
    ×