என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai robbery"
- சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.
- கொள்ளை தொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 44 வயதான இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தொழில் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டு ரெயிலில் சென்னை திரும்பினார்.
தனது பையில் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து வந்தார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளியை காணாமல் திடுக்கிட்டார். இது தொடர்பாக ரெயில்வே போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.
இதனை பயன்படுத்தியே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- காதர் பாட்ஷாவின் கடையில் வேலைபார்த்த ஊழியர்களான அஜிஸ், கவுதம் இருவரும் கொள்ளையர்களாக மாறி இருப்பது தெரியவந்தது.
- இருவரும் போலீசில் பிடிபடும் முன்னரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
சென்னை:
பெரியமேடு லாலா குட்டி தெருவை சேர்ந்தவர் காதர் பாட்ஷா. இவர் அதேபகுதியில் லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடையில் இருந்து ரூ.76 லட்சத்து 53 ஆயிரம் பணம் கொள்ளை போனது. காதர் பாட்ஷாவின் கடையில் வேலைபார்த்த ஊழியர்களான அஜிஸ், கவுதம் இருவரும் கொள்ளையர்களாக மாறி இருப்பது தெரியவந்தது. இருவரும் போலீசில் பிடிபடும் முன்னரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர். காதர்பாட்ஷாவின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் காலில் தொடர்புகொண்டு பேசிய இருவரும் மிகவும் துணிச்சலாக நாங்கள் தான் பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் காதர் பாட்ஷா புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துவிட்டு தப்பிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
- கடையில் இருந்த சர்க்கரை மற்றும் 20 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
- கொள்ளை குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போரூர்:
சென்னை கே.கே நகர் 4-வது செக்டார் 14-வது தெருவில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரேசன் கடை ஊழியர் முனியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் விரைந்து வந்து பார்த்தபோது கடையில் இருந்த சர்க்கரை மற்றும் 20 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த உலகநாதன், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற சிவ விநாயகம் ஆகிய இருவரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- கொள்ளையடித்த நகைகளை விற்க உதவியாக இருந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நித்யா என்கிற கீதாவை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் சுப்பிரமணியன் (வயது 61). மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
இவர் கடந்த 21-ந் தேதி மனைவி லட்சுமியுடன் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றார். இவரது மகன் புவனேஸ்வரன் வீட்டை பூட்டிவிட்டு தொழில் சம்மந்தமாக புனேவுக்கு புறப்பட்டு சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் குமார் சுப்பிரமணியன் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
கொள்ளையர்களை பிடிக்க கோயம்பேடு துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் கைவரிசை காட்டி கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த உலகநாதன், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற சிவ விநாயகம் ஆகிய இருவரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளையடித்த நகைகளை விற்க உதவியாக இருந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நித்யா என்கிற கீதாவை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நகைகளை பறிமுதல் செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். உலகநாதன், சிவ விநாயகம் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளது.
மேலும் சென்னையில் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்கிலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- கொள்ளை குறித்து ராஜேஷ் கார்த்திக் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார்.
- விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.
சென்னை:
சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக் (வயது37) முந்திரி பருப்பு மொத்த வியாபாரி. இவர் தொழில் சம்மந்தமாக நேற்று முன்தினம் கடலூர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ராஜேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர். இன்று அதிகாலை சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.
- கைதான சிவக்குமார் உள்பட 6 பேரும் மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
- அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொளத்தூர்:
மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர் கடந்த 25-ந் தேதி காலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகையை பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் மாதவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதிகளில் இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபி ஆகியோர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரும்பாக்கத்தை சேர்ந்த முகமது நியாஸ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற அப்துல்லா, கொடுங்கையூரை சேர்ந்த ஜமால், மாதவரத்தை சேர்ந்த சையத் இப்ராஹிம் ஆகியோரும் கூட்டாளிகளாக இருந்தது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
கைதான சிவக்குமார் உள்பட 6 பேரும் மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் இயங்கி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் உதயகுமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வேப்பேரியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் தொழில் ரீதியாக 1 கோடியே 7 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
பணத்துடன் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். காருக்குள் அவருடன் டிரைவர் மற்றும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் இருந்தனர்.
சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகில் அவர்கள் கார் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் முன்னே சென்று மறித்து தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் தங்களை தேர்தல் அதிகாரி என்று கூறிக் கொண்டனர்.
காரை சோதனையிட வேண்டும் என்று சொல்லி சோதனையிட்டனர்.
அப்போது கட்டுமான நிறுவனத்துக்காக வாங்கியிருந்த ரூ.1 கோடி பணம் இருப்பதை கண்டு பிடித்தனர். அதை எடுத்துக் கொண்ட அந்த நபர்கள் இந்த பணத்துக்கு உரிய கணக்கை காட்டுங்கள் என்று கேட்டனர்.
பிறகு அவர்கள் ரூ.1 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு உதயகுமாரை தங்களது காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பூந்தமல்லி அருகே சென்றபோது அவர்கள் உதயகுமாரை அடித்து உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர்.
அதன் பிறகே உதயகுமாருக்கு தேர்தல் பறக்கும் படை என்ற பெயரில் மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றி ரூ.1 கோடியை பறித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி உதயகுமார் சைதாப்பேட்டை போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உண்மையிலேயே பறக்கும் படை என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.1 கோடியுடன் தப்பி சென்றார்களா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. #ChennaiRobbery
சென்னை தேனாம்பேட்டையில் செல்போன் வியாபாரியான ஜாபர் சாதிக். அவரது நண்பர் தமிம்அன்சாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் மிளகாய் பொடியை தூவி அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்தது. ரூ.4 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை போனதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுபற்றி ஜாபர்சாதிக், தமிம்அன்சாரி இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிம்அன்சாரி நண்பர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணத்துடன் செல்வது பற்றி தனது நண்பர்களான வியாசர்பாடியை சேர்ந்த விக்கி, கார்த்திக், அருண், மனோகரன் ஆகியோரிடம் தமிம்அன்சாரி செல்போனில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிம்அன்சாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தி.நகரில் உள்ள பணபரிமாற்ற நிறுவனத்தை சேர்ந்த 7 பேரும் இப்போது பிடிபட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் மேலாளர் சபீஅகமது, ஊழியர்கள் செல்வகுமார், வெங்கடேஷ், பத்மநாபன், அசோக்குமார், அபுபக்கர் சித்திக், முகமது முத்தாகிர் ஆகிய 7 பேர் சிக்கினர்.
ரூ.10 லட்சம் பணத்தை முறையற்ற வகையில் ஆவணங்கள் இன்றி அமெரிக்க டாலர்களாக இவர்கள் மாற்றிக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
சென்னை வேளச்சேரி லட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சத்யபிரியா சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
சத்யபிரியா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஷீலா பார்த்த சாரதி. இவர் திருவண்ணாமலை சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 கிலோ வெள்ளி, 3 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூரில் ராஜா சந்திரசேகர் என்பவர் வீட்டு பூட்டை உடைத்து 5 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள அன்னை சத்யாநகரில் வசித்து வருபவர் அலேகா. திருநங்கையான இவர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சசிகாந்த் ரெட்டி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சைலஜா ரெட்டி.
கணவன்-மனைவி இருவரும் கடந்த மூன்று மாதங்களாக சென்னை அமைந்தகரை வெற்றி விநாயகர் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். மாலையில் திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10சவரன் நகை, லேப்டாப் மற்றும் 4ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணடி, பிடாரியார் தெருவை சேர்ந்தவர் சபிபுல்லா, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று மாலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 9 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மகும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து முந்தியால் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றச்செயல்களை தடுக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கலாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஏரிப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 8 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை குரோம்பேட்டையில் ஒரு பெண்ணை 2 நபர்கள் மிரட்டி வழிப்பறி செய்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து வழிப்பறி ஆசாமிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் பாபு (35), கோபி (48) என்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiRobbers
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்