என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai traffic"

    • வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
    • வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருத்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    TATA IPL Season 2025 கிரிக்கெட் போட்டிகள் 23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025 & 12.05.2025 Globes MA சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், பின்வருமாறு வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    நிறுத்தத்திற்கான எற்பாடுகன்:-

    1. பொதுமக்கள் MRTS, உயில் அல்லது மெட்ரோ ரயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    2. வாகன நிறுத்தத்திற்கான அனுமதி வைத்திருப்பவர்கள் வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகணங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்(இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதாணம் 200 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    3. அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள்:-

    * போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் R.K சாலை வழியாக காமராஜர் சாலை சென்று மெரினா கடற்கரை அடைந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம். (இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 500 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    ஆ. போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிஷபோன்ற வணிக வாகனத்தில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருந்து வாலஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.

    4. வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருத்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் சுாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல/இறக்கிவிடுவதற்கு அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். (பேருந்து நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 300 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன)

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
    • இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.

    மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.

    இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
    • பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்தது. இதையொட்டி வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடந்த புதன் கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

    இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை நோக்கி செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை 8 வழிகளில் காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். உளுந்தூர்பேட்டை,விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. அணிவகுத்து நிற்பதால், வாகனங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    • பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் 13-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட வேண்டும்.

    பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்தால் அதற்கு முந்தைய நாட்களான 11, 12-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். அதன்படி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்து விடும்.

    இந்நிலையில், விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்றே படையெடுத்துள்ளனர்.

    இதனால், சென்னை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால், கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    சென்னை கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், சிக்னல் கோளாறு காரணமாக இயக்கப்படாததால், சுமார் 1.30 மணி நேரமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மேலும், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.

    • 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா நாளை மாலை நடைபெறுகிறது.
    • சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பயணிகளுக்கு போலீசார் அறிவுரை.

     சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    44வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நாளை 28.07.2022 மாலை நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில்பிரதமர், தமிழ் நாடு ஆளுநர்,முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள்.

    எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் 28.07.2022 நண்பகல் முதல் இரவு 21.00 மணிவரையில் ராஜா முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம்.

    எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய ரெயில் நிலையத்திற்கு நாளை வரவேண்டிய பொதுமக்கள் அவர்களதுப் பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து போலீசார் பணியின்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது என்று அறிக்கை வெளியிட்ட தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. #MadrasHC
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் பலர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாமல், சாலையோரம் உட்கார்ந்துக் கொண்டு செல்போனில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடும் கண்டனம் தெரிவித்தார்.

    ‘பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், தன் கார் உள்பட சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் புறப்படும்போது, ஒரு பெண் சாலையை வேகமாக கடந்தார். ஆனால், எதையும் கண்டு கொள்ளாமல், போக்குவரத்து போலீசார் தன்னுடைய செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார்.


    இதுகுறித்து தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரது கவனத்துக் கொண்டு செல்லவேண்டும்’ என்று அரசு குற்றவியல் வக்கீல் முகமது ரியாசிடம் நீதிபதி கூறினார்.

    இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அரசு குற்றவியல் வக்கீல் ஆஜராகி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகளை தாக்கல் செய்தார்.

    அதில், ‘போலீசார் எந்நேரமும் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக புகார்கள் ஏராளமாக வருகின்றன. போலீஸ் பணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் விதமாக துடிப்புடன் இருக்கும் பணியாகும். அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் போலீசார், செல்போன் பயன்படுத்துவதன் மூலம் கவனச்சிதறல் ஏற்படுகின்றன. எனவே, செல்போன் பயன்பாட்டினால், ஏற்படும் கெட்ட பின்விளைவுகளை உயர் அதிகாரிகள் எடுத்துக் கூறவேண்டும். பணியில் இருக்கும் போலீசார் செல்போன்களை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது.

    எனவே, சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழ் பணியாற்றுபவர்கள், பணியின்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி என்பது முக்கியமான பணி என்பதால், போக்குவரத்து போலீசார் பணியின்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதை நீதிபதி படித்து பார்த்தார். பின்னர் அரசு குற்றவியல் வக்கீல், ‘இந்த சுற்றறிக்கை வெளியிட்ட பின்னரும் செல்போனை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 13 போலீசார் மீதும், திருவாரூர் மாவட்டத்தில் 9 போலீசார் மீதும், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் தலா 3 பேர் என்று 6 போலீசார் மீதும், திண்டுக்கலில் 2 பேர் மீதும், கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ஒரு போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, ‘ஐகோர்ட்டு கருத்து தெரிவித்ததும், டி.ஜி.பி.யும், சென்னை போலீஸ் கமி‌ஷனரும் நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. பொது மக்களின் நலனுக்காகத் தான் இந்த கருத்து நான் தெரிவித்தேன். எனவே, போக்குவரத்து போலீசார் பணியின்போது, உயிர் சேதம் ஏற்படாத வண்ணம், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவேண்டும்’ என்று கூறினார். #MadrasHC
    சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போலீஸ்காரர்கள் செல்போனில் விளையாடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். #MadrasHC
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

    அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, இன்று காலையில் ஐகோர்ட்டுக்கு வரும் வழியெல்லாம் போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருந்ததை பார்த்தேன். அத்தனை பேரும், அங்கு சர்வ சாதாரணமாக உட்கார்ந்துக் கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    யாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை செய்யவில்லை. சிக்னலில் என்னுடைய கார் உள்பட ஏராளமான வாகனங்கள் நிற்கின்றன. பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், அனைத்து வாகனங்களும் புறப்படும் நேரத்தில், ஒரு பெண்மணி சாலை குறுக்கே ஓடுகிறார். அதை கண்டுக் கொள்ளாமல், போலீஸ்காரர் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட அரசு வக்கீல், அது எந்த சிக்னல் என்று கூறினால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.

    அதற்கு நீதிபதி, அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. என்னைப் பொருத்தவரை பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தான் முக்கியம். அந்த பெண்மணி மீது வாகனங்கள் மோதி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒரு இடம் மட்டுமல்ல, சென்னை முழுவதும் 99 சதவீத போக்குவரத்து போலீஸ்காரர்கள் வேலை செய்வது இல்லை.


    சாலையோரம், சிக்னல் அருகே உள்ள இரும்பு சேரில் உட்கார்ந்துக் கொண்டு போன் பேசுவது அல்லது போனில் வாட்ஸ்அப் பார்ப்பது, இதை தான் செய்கின்றனர். சாலையில் செல்லும் உயர் போலீஸ் அதிகாரிகளும் இதை கண்டு கொள்வது இல்லை. அதற்காக இந்த நிலையை இப்படியே விட்டு விடவும் முடியாது என்று கூறினார்.

    பின்னர், நீதிபதிகள் தன் மேஜைக்கு மேல் செல்போன்களை வைத்துக் கொண்டு, வழக்கு விசாரணைகளுக்கு இடைஇடையே செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாலோ, பேசினாலோ எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரிடம் இந்த நிலவரத்தை கூறுங்கள். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்பதை வருகிற 30-ந்தேதி எனக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். #MadrasHC
    ×