என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chepakkam Stadium"
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் ஆல் அவுட்டானது.
சென்னை:
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்கா இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- தென் ஆபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
- வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்ற மகளிர் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வுல்வார்ட்- டன்ஸிம் பிரிட்ஸ் ஜோடி முதல் 7 ஓவரில் 50 ரன்கள் விளாசியது.
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சார்பில் முதலில் களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. 10 வது ஓவருக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தினர்.
வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார். ஆனால் கடைசி ஓவரில் 190 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்த போதிலும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
- BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர்.
- மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கடுமையாகப் போராடி பைனல்ஸ் வரை வந்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றிக் கோப்பைக்கான வேட்டையில் ஆக்ரோஷமாக விளையாடின.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வெனறு பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது.
வெற்றிக்குப் பிறகு, BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர். கோப்பையை பெற்ற ஸ்ரேயாஸ் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றபோது செய்ததைப் போல பாவனை செய்து தனது அணியுடன் கோப்பையை உயர்த்திக்காட்டினார்.
கடந்த 2022 டிசம்பரில் கத்தாரில் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான அசுர வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி வெற்றிக்களிப்பில் நடந்து வந்த தருணத்தை ஐபில் கோப்பையை பெற்றுக்கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் உருவாக்கியது அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.
- நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது
- பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் கேகேஆர் அணியின் இணை உரிமையாளராக உள்ளார்
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. தொடக்கம் முதலே கொல்கத்தாவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளரான கவுதம் காம்பிர் விளங்குகிறார்.
நேற்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு கேகேஆர் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரும் கேகேஆர் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக் கான், மைதானத்துக்குள் வந்து அணியில் உள்ளவர்களைக் காட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கேகேஆர் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக கவுதம் கம்பீரின் நெற்றியில் ஷாருக் முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வாக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை கேகேஆர் அணி பயிற்சியாளராகவே நீடிக்க வலியுறுத்தி அவருக்கு ஷாருக் கான் பிளாங்க் செக் கொடுத்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- சேப்பாக்கம் மைதானத்தின் பெவிலியன் பகுதி புது பொலிவுடன் தயாராகி வருகிறது.
- அடுத்த மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி நடைபெற வாய்ப்பு.
இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியன் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டேடியம் தயார் நிலைக்கு வர இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி இங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் போட்டியான துலீப் டிராபி போட்டியை செப்டம்பர் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இது தவிர ரஞ்சி டிராபி போட்டியின் சில ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்