என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheran"

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.

    உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் இசையை ஜேக்ஸ் பிஜாய் மேற்கொள்ள படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மின்னல்வாலா பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
    • ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார்.

    பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'.

    இதில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காக பாடகி சித்ரா, பாடலாசிரியர் பா.விஜய் தேசிய விருது பெற்றனர்.

    பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் பருவம் என ஒரு சராசரி தமிழ் இளைஞனின் வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

    இந்த நிலையில், படம் வெளியாகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆட்டோகிராப்' படம் மே 16ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    படம் ரீ-ரிலீஸாவதை ஒட்டி புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    • டொவினோ தாமஸ் அடுத்ததாக நரிவேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வெளியாகும்ம் பிருதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகும் எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நரிவேட்டை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’.
    • இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    எளிய மக்கள் வெளியிட்ட தமிழ்க்குடிமகன் போஸ்டர்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை வித்தியாசமான முறையில் ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள், துணை நடிகர் நடிகைகள் வெளியிட்டுள்ளனர்.


    எளிய மக்கள் வெளியிட்ட தமிழ்க்குடிமகன் போஸ்டர்

    இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    • இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’.
    • இந்த படத்தில் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    தமிழ்க்குடிமகன்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    தமிழ்க்குடிமகன்

    இந்நிலையில், தற்போது 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சாதினால் அவதிப்படும் குடும்பத்தை காட்சிப்படுத்துவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா காலமானார்.
    • இவருடைய மறைவுக்கு நடிகர் ரஜினி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    இந்நிலையில் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ராதிகா பதிவிட்டிருப்பது, இதயம் நொறுங்கியதாக உணர்கிறேன். இன்று காலையில் தான் அவரிடம் போனில் பேசினே. இருவரும் சிரித்து, சண்டையிட்டு, சாப்பிட்டு பல விஷயங்களை பற்றிய் பேசியுள்ளோம், நாம் அனைவரும் அவரை மிஸ் செய்வோம்.


     



    இயக்குனர் சேரன் பதிவிட்டிருப்பது, தாங்க முடியாத செய்தி... மனதை உலுக்கி எடுக்கிறது.. நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது.... போய்வாருங்கள் மாமா....

    நடிகர் கவுதம் கார்த்திக், இதற்கு பிறகு மனோபாலா சார் நம்முடன் இருக்கமாட்டார் என்ற செய்தி இதயத்தை உடைக்கிறது. அவருடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோஷம். கண்டிப்பாக உங்களை மிஸ் செய்வேன். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தனர்.

    மேலும் இளையராஜா, பாராதிராஜா வீடியோ பதிவின் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

    மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நண்பன் நிறுவனத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
    • இதில், விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

    நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்'ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, பியானோ லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர்.


    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாசர் பேசியதாவது, '' உலகில் இருக்கும் உன்னதமான உறவு நட்பு. உன்னதமான நட்பை ஒரு தத்துவமாக்கி, அதனை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதற்காகவும் நம் மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதற்காகவும் முதலில் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


    வெள்ளைக்காரன் ஒரு விசயத்தைச் செய்தால் அதை உடனடியாக எழுதி வைத்து விடுவார். ஆனால் நாம் பல விசயங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். நட்பிற்கு விளக்கம் தேவையில்லை. அந்த ஒரு எளிய உறவை.. உணர்ச்சியை... உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும் பரப்புகின்ற உங்களுக்கு இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நட்பைக் காணிக்கையாக்குகிறேன்.


    நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக நினைக்கிறேன். நட்புடன் இருப்போம் நண்பர்களாகவே இருப்போம். இங்கு விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான். நான் வாழ்க்கையில் என்ன ஆவேன் என தெரியாமல் இருந்த காலகட்டத்திலிருந்து என்னை வழிநடத்தியவர்கள். கவிஞர் அறிவுமதி, நான் படத்தை இயக்கும்போது அவராகவே முன்வந்து உதவி செய்தவர். பேராசிரியர் ராமசாமி அவருக்கும் எனக்குமான நட்பு புதிரானது. ஓவியர் டிராட்ஸ்கி மருது இல்லையென்றால் எனக்கு எழுதவே வந்திருக்காது. " என்றார்.


    மேலும், இயக்குனர் சேரன் பேசியதாவது, '' நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும், சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது பி.சி. ஸ்ரீராம் சொன்னது போல், அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறேன். நண்பன் குழுமம் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


    இந்த விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குனர் பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் சேரன், கலை இயக்குனர் முதுதுராஜ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    இதற்கு முன்னதாக கலை மற்றும் பண்பாட்டு துறையில் சிறந்த சேவை செய்துவரும் கலைஞர்களான ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, பேராசிரியர் மு ராமசாமி, கவிஞர் அறிவுமதி, புரிசை கண்ணப்ப சம்பந்தம், பெரிய மேளம் கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு நண்பன் விருது வழங்கப்பட்டது. இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.


    இவர்களைத் தொடர்ந்து நண்பன் டேலண்ட் கேட்வே விருதினை அறிமுக படைப்பாளிகளான கணேஷ் கே பாபு, விக்னேஷ் ராஜா, விநாயக் சந்தரசேகரன், முத்துக்குமார், மந்திரமூர்த்திக்காக அருவி மதன் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன், நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இயக்குனர் சேரன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கி நடித்துள்ளார்.
    • இவர் பட்டங்களும் பதவிகளும் ஒரு நாள் மறக்கப்படுபவைதான் இதற்காக ஏன் இத்தனை சண்டைகள் என்று பேசினார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    இயக்குனர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவரிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடம் ஏற்படும் பிரச்சினை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "இந்த போட்டியும் சண்டையும் ஒவ்வொரு காலமும் வந்திருக்கிறது. இதை நாம் ஒரு செய்தியாக எடுத்துக்கொண்டு, பார்வையாளர்களை தூண்டிவிட்டு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்குவது தமிழ் கலாசாரத்திற்கு அழகில்லை.


    திறமையானவர்களை போற்றுங்கள், திறமைசாலிகளை கொண்டாடுங்கள் அதோடு முடித்துக்கொள்வோம். என்றைக்கு இருந்தாலும் இந்த இடம் நிரந்தரம் இல்லை. பட்டங்களும் பதவிகளும் ஒரு நாள் மறக்கப்படுபவைதான். இதற்காக ஏன் இத்தனை சண்டைகள். இது உலகத்தின் முக்கிய பிரச்சினை இல்லை. மணிப்பூரில் இரண்டு பெண்களை அவமானப்படுத்தியது குறித்த கேள்வி உங்களிடம் இருந்து வரவில்லை. ஆனால் இது ஒரு கேள்வியாக கேட்கிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்" என்று பேசினார்.

    • இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    இயக்குனர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவரிடம் விஜய் சேதுபதிக்கு படம் இயக்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அது இனிமேல் பண்ண முடியாது. அவரோட நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதை மாற்றப்பட வேண்டும் மற்றும் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது" என்று கூறினார்.

    • நடிகர் கிச்சா சுதீப் 'நான் ஈ' படத்தில் நடித்து பிரபலமானார்.
    • இவர் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து ரசிகர்களை கவந்தார்.


    கிச்சா 47 போஸ்டர்

    இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் 47-வது படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




    • இயக்குனர்- நடிகராக வலம் வருபவர் சேரன்.
    • இவரது தந்தை சினிமா ஆப்பரேட்டராக பணிப்புரிந்தவர்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

    இவரின் தந்தை எஸ். பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிப்புரிந்தவர். 84 வயதான பாண்டியன் சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில், இவர் இன்று (நவம்பர் 16) காலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும். சேரன் தந்தை காலமானதை தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×