என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
பட்டங்கள் ஒரு நாள் மறக்கப்படும்.. இது எல்லாம் ஒரு கேள்வியா..? கடுப்பான சேரன்
- இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கி நடித்துள்ளார்.
- இவர் பட்டங்களும் பதவிகளும் ஒரு நாள் மறக்கப்படுபவைதான் இதற்காக ஏன் இத்தனை சண்டைகள் என்று பேசினார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.
இயக்குனர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவரிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடம் ஏற்படும் பிரச்சினை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "இந்த போட்டியும் சண்டையும் ஒவ்வொரு காலமும் வந்திருக்கிறது. இதை நாம் ஒரு செய்தியாக எடுத்துக்கொண்டு, பார்வையாளர்களை தூண்டிவிட்டு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்குவது தமிழ் கலாசாரத்திற்கு அழகில்லை.
திறமையானவர்களை போற்றுங்கள், திறமைசாலிகளை கொண்டாடுங்கள் அதோடு முடித்துக்கொள்வோம். என்றைக்கு இருந்தாலும் இந்த இடம் நிரந்தரம் இல்லை. பட்டங்களும் பதவிகளும் ஒரு நாள் மறக்கப்படுபவைதான். இதற்காக ஏன் இத்தனை சண்டைகள். இது உலகத்தின் முக்கிய பிரச்சினை இல்லை. மணிப்பூரில் இரண்டு பெண்களை அவமானப்படுத்தியது குறித்த கேள்வி உங்களிடம் இருந்து வரவில்லை. ஆனால் இது ஒரு கேள்வியாக கேட்கிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்" என்று பேசினார்.