search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chicken feet"

    • கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை.
    • ஏராளமான "கொலாஜன்" கால்களில் நிரம்பி உள்ளன.

    நாம் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்படுவது கோழியின் கால்கள்தான்... ஆட்டுக்கால்கள் அனைவராலும் விரும்பப்படும் அளவுக்கு சிக்கன் கால்கள் விரும்பப்படுவதில்லை... உடைந்துபோன எலும்புகளை விரைவில் ஒன்று சேர ஆட்டுக்கால் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதுபோல, சில உள்சார்ந்த கோளாறுகளை தீர்க்க இந்த கோழிக்கால்களும் உதவுகின்றன.

    கோழிக்கால்கள்:

    கோழிக் கால்கள் அதிக கொழுப்பு சத்து இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், இது முழுவதுமே உண்மை கிடையாது.. நமது உடலின் நலமானது பாதுகாக்கப்படுகிறது. கோழியின் மார்பகத்தில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகளானது, கோழி கால்களில் உள்ளதை விட குறைவாக இருந்தாலும், கோழி மார்பகங்களை தோலுரித்த பிறகு கோழி கால்களில் உள்ள கொழுப்பின் அளவு, மாட்டிறைச்சி மற்றும் செம்மறி ஆட்டு இறைச்சியைவிட குறைவாகவே உள்ளதாம்.

    கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை. அத்துடன், ஏராளமான "கொலாஜன்" இந்த கால்களில் நிரம்பி உள்ளன. இந்த கொலாஜன்தான், நம் உடலில் ஏற்படும் வயதான சுருக்கத்தை தள்ளி போடுகிறது. சருமத்தை பாதுகாக்கிறது. நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுவதே கொலாஜன்தான்.

    ரத்த சிவப்பணுக்கள்:

    அடிக்கடி கோழிக்காலை சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கிவிடும். நமக்கான ரத்த சிவப்பணுக்கள் அளவை அதிகரிக்கவும் செய்கின்றன. அதுமட்டுமல்ல, கோழியின் கால்களில், புரோட்டீனும், கால்சியமும் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உடலில் ஏற்படும் காயங்களை விரைந்து குணமாக்க இந்த கால்கள் உதவுகின்றன. மற்ற சிக்கனை போலவே, இந்த கோழியின் கால்களில், குழம்பு செய்யலாம், சிக்கன் ௬௫ செய்யலாம். ஆனால், சூப் செய்து குடிப்பதையே பலரும் விரும்புவார்கள்.

    கால் சூப்:

    இந்த சூப் செய்வதற்கு, முதலில் கோழியின் கால்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கோழி கால்களை அதில் போட்டு, எடுக்க வேண்டும். பிறகு, கோழியின் கால்களில் உள்ள மெல்லிய மஞ்சள் நிற தோலை கையாலேயே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, கால் விரல்களை வெட்டித்தள்ளி விட்டு, கால்களை மட்டும் சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

    கோழிக்கால் குழம்பு:

    இப்போது, ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், கல் உப்பு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு மசாலா தூள் சேர்த்து தண்ணீர் + கோழி கால்களை அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்தபிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால், கோழிக்கால் சூப் ரெடி. அதேபோல, வெறும் கோழிகால்களை சுத்தம் செய்து, வெறும் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்த்தும் சூப் செய்து குடிக்கலாம்.

    ×