என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Chicken Recpes"
- பல்வேறு வகையான பிரியாணிகள் உள்ளது.
- இன்று ஈசியான முறையில் சிக்கன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
பிரியாணி அரிசி - 3 கால் படி
பெரிய வெங்காயம் - 1 / 2
தக்காளி - 1 / 2
பூண்டு - 8 பல்
இஞ்சி - 2 அங்குலம்
புதினா - ஒரு கை நிறைய
கொத்தமல்லித்தழை - ஒரு கை நிறைய
சோம்பு - 1 / 2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் - 50 கிராம்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லித்தழை, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை 1 போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்கவும்.
பின்னர் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இதில் அரைத்த விழுதை சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து இதில் மூன்று சொம்பு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியைப் போட்டு குக்கரை மூடி வைக்கவும்.
வழக்கம் போல் மூன்று விசில் வந்ததும் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி விடவும்.
ஸ்டீம் போனவுடன் குக்கரைத் திறந்து சிறிது நெய் சேர்த்து கிளறி விடவும்.
இப்போது சூப்பரான சிக்கன் பிரியாணி ரெடி.