என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chidhambaram Nadarajar"
- நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு.
- நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என புகார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தது.
நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- அங்கு, வலம் வரும் முன், நாம் முதலில் தரிசிக்க வேண்டியது மாம்பழ விநாயகரைத் தான்.
- கையில் மாம்பழம் ஏந்திய கோலத்தில் அழகிய உருவில் விநாயகப் பெருமான் அமைந்திருப்பார்.
கிழக்கு கோபுரம் வழியாக நடராஜர் ஆலயத்திற்கு செல்லும் பாதையான 21 படிகள் என்னும் வாயிலைக் கடந்தால்,
முதலில் வருவது, தண்டாயுதபாணி சன்னிதி அமைந்த குலோத்துங்க சோழன் திருமாளிகை பிரகாரம் வரும்.
அங்கு, வலம் வரும் முன், நாம் முதலில் தரிசிக்க வேண்டியது மாம்பழ விநாயகரைத் தான்.
கையில் மாம்பழம் ஏந்திய கோலத்தில் அழகிய உருவில் விநாயகப் பெருமான் அமைந்திருப்பார்.
அவரை தரிசித்து, பிரகாரம் வலம் வந்தால் கொடி மரம்
அதன் அருகே பால தண்டாயுதபாணி சன்னிதி
பிறகு பிரகார வலம் முடித்து, நடராஜரை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.
- நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது.
- ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.
நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது.
ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.
இதன் மூலம் 'பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
கோவிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது.
கோவிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோவில் ஒரு தனியான கோவில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.
சிவராத்திரியின்போது நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
இது தவிர மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் போன்ற விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் தரிசனம் போன்ற விமரிசையான சடங்குகள் இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன.
- கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது.
- இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.
கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது.
இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.
நான்காவது பிரகாரத்தை அடுத்து கோவிலின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மூன்றாவது பிரகாரத்திற்குள் இறங்குவதற்கு கிழக்கும் மேற்கும் வாசல்கள் உள்ளன.
இந்தப்படிகளின்வழி இறங்கி மூன்றாவது பிரகாரத்தில் நாம் நுழையும்போதே கருங்கல் அமைப்புகளின் பிரம்மாண்டம் மற்றும் இருள் கவிந்த பாதாளத்தின் குளிர்ச்சியோடு கோவில் நம்மை உள்வாங்கி கொள்கிறது.
உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப அமைப்புகளோடு காட்சியளிக்கும் மூன்றாவது பிரகாரத்திலிருந்து அடுத்த இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைய கிழக்குத்திசையில் ஒரு வாசல் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பிரகாரத்தில் தேர்போன்ற சன்னதி, தங்கவிமானம் மற்றும் திறந்தவெளி சுற்றுப்பிரகாரம் போன்றவற்றை காணலாம். மேலும் முதல் பிரகாரமான கருவறை இங்குதான் வீற்றிருக்கிறது.
இதுவே சித்சபை என்றழைக்கப்படுகிறது. இதற்கு எதிரே கனகசபை மற்றும் நிருத்யசபை ஆகியவை அமைந்துள்ளன.
இது தவிர மூன்றாவது பிரகாரத்தில்தேவ சபையும், நான்காவது பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜ சபையும் ஆக ஐந்து சபைகள் நடராஜர் கோவிலின் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.
- அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.
- நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.
நடராஜர் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில்.
இது சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம். அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நம் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம்.
இது கோவில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட!. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோவிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.
கோவில் வளாகம் பல்வேறு அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.
ராஜகோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் நாம் கால் பதித்த உடனேயே பிரமிப்பு புராதன திராவிடக் கட்டிடக்கலையின் நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது.
அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.
நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.
இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோவில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.
மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதில் சுவரையட்டியே காணப்படுகிறது.
- ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.
- இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.
ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது.
இங்கு 999 தூண்கள் மட்டுமே உள்ளன. மீதமான ஒன்று நடராஜப் பெருமானின் ஊன்றிய கால்.
ஆக, மொத்தம் 1000 கால் மண்டபம் ராஜசபையாக விளங்குகிறது.
இது 5வது சபையாகும்.
இங்குதான் ஆனி (மிதுனம்), மார்கழி (தனுசு) மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களில் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருந்து, விடியற்காலையில் அபிஷேகம் நடைபெற்று, பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சியளிப்பார்.
பிறகு பெருமான் முன்னதாகவும், பெருமாட்டி பின்னாலும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சித்சபைக்கு செல்வர்.
ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.
இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.
- இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.
- இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான்.
குலோத்துங்க சோழன் திருப்பணி செய்த தேவசபை (பேரம்பலம்)
பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர்.
இங்குதான் மாதந்தோறும் திருஆதிரை நட்சத்திரத்தன்று சோமாஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.
இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான்.
இப்பேரம்பலத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தான்.
- சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.
- சுவாமிக்கு தென்பகுதியில் ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்.
சிதம்பரத்திற்கு ''நிருத்த சேத்ரம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆடல்வல்லான் ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இது.
சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிடவே அம்பாள் காலை தூக்கி ஆட முடியாமல் போகவே சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.
இத்தகு தெய்வ திருநடன சிறப்பு பெற்ற இடம்தான் நடனசபை என்ற நிருத்த சபை ஆகும்.
சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.
சுவாமிக்கு தென்பகுதியில் ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்.
இவருக்கு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்ய சகல தோஷங்களும் விலகும்.
ராகுகாலத்தில் நெய்தீபம் ஏற்றினால் சிறந்த பலன்களைப் பெற்று தரும்.
- சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை.
- நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும்.
சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை.
நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும்.
இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி ஆறுகால பூஜையும், பகல் இரண்டாம் காலத்தில் ரத்தின சபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறும்.
பொன்னம்பலத்தின் முகப்பை ஆதித்த சோழன் கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த மாற்றுயர்ந்த பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ளார்.
கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது.
கனகசபையின் ஐந்து தளவரிசைக் கற்கள் பஞ்சபூதங்களின் தத்துவத்தை குறிக்கும்.
கனகசபையில் நின்றுதான் சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள்.
மேலும் ஆடல் வல்லானின் ஆட்டத்தை கனக சபையின் மூலமே தரிசிக்க முடியும்.
- சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும்.
- அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும்.
5 சபைகள்
சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன. இந்த 5 சபைகளின் சிறப்புகள் வருமாறு:
சித்சபை
சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.
வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது.
குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது.
சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.
ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600.
மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும்.
9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும். 224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும்.
64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64 ஐக் குறிக்கும்.
சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும். அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும்.
ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 பல கனிகள் (ஜன்னல்) 96 தத்துவங்களை குறிக்கும்.
விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும்.
ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும் இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர்.
இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன.
இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன.
சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார்.
ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது. நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்