search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chief Minister Palanisamy"

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #EdappadiPalaniswami #PMModi
    புதுடெல்லி :

    பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க அனுமதி கேட்டு கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, நாளை பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.  இதனால், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்ற முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் இன்று இரவு தங்குகிறார்.

    மேலும், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மக்களவை துணை சபாநாயகர் அலுவலகத்தில் இந்த அலோசனை நடைபெற உள்ளது.

    டெல்லியில் உள்ள சகேத் பகுதியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தையும் இந்த பயணத்தின் போது முதலமைச்சர் பார்வையிட உள்ளார். #EdappadiPalaniswami #PMModi
    ×