என் மலர்
நீங்கள் தேடியது "Child Murder Case"
- புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
- கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து அறிவிப்பு.
புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக பந்த் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பங்க் கடை வைத்துள்ளார். இவருக்கும், ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் கார்த்திகேயன், அவரது தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தைகள் என அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென அரிவாளால் வெட்டுவது போல் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்ட ராஜேஸ்வரி எழுந்து பார்த்தார். அங்கு கார்த்திகேயன் குழந்தையை கத்தியால் துண்டு, துண்டாக வெட்டிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். குழந்தை துண்டுதுண்டாக வெட்டி இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர்.
இதுகுறித்து வானாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஹேமசித்ரா, தண்டாரம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
குழந்தையின் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
இருப்பினும் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்படுவதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மகள் ஷாலினி (வயது 3) கடந்த மாதம் 26-ம் தேதி மாலை விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதன்பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கு மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். #HumanSacrifice