என் மலர்
நீங்கள் தேடியது "Childbirth at home"
- 5-வது கர்ப்பமானதை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மனைவி அஸ்மா (வயது35). இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அஸ்மா மீண்டும் கர்ப்பமானார். அஸ்மாவுக்கு முதலில் இரண்டு குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் வைத்து பிறந்துள்ளது. 3 மற்றும் 4-வதாக அவருக்கு வீட்டில் வைத்தே குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் 5-வது குழந்தையையும் வீட்டில் பிரசவம் பார்த்து பெற்றோருக்கு கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனால் 5-வது கர்ப்பமானதை அக்கம் பக்கதத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அஸ்மாவுக்கு நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிரசவத்தின் போது அஸ்மா பரிதாபமாக இறந்துவிட்டார்.
அவருக்கு பிறந்த குழந்தை பெரும்பாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. பிரசவத்தின் போது அஸ்மாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சிராஜூதீன் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தான் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால கவனிப்பு வழங்குவதற்கு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்கள், இந்திய நர்சிங் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் (நர்சுகள்) மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து கொள்வது மட்டுமே தாய் மற்றும் சேயின் நலத்துக்கு பாதுகாப்பானது. தமிழகத்தில் அனைத்து பிரசவங்களுமே மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
‘வீடியோ’ காட்சிகளைப் பார்த்துவிட்டோ, திரைப்படங்களைப் பார்த்துவிட்டோ, பிரசவம் பார்க்கலாம் என்பது அறிவார்ந்த செயல் அல்ல. கர்ப்பிணித்தாயின் உயிருக்கு ஊறு விளைவிக்கும். இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியது என எச்சரிக்கப்படுகிறது.
கணவனையும், குடும்பத்தாரையுமே சார்ந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ சேவை தேவைப்படும் போது அறியாமையாலோ அல்லது வேறு காரணங்களினாலோ மருத்துவ சேவை கிடைக்காமல் தடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 82-ன் படி தாய்சேய் நலத்தை மேம்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தாய்சேய் நலன் காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசு டாக்டரையோ, கிராமம் மற்றும் நகர்ப்புற செவிலியர்களையோ, பிற அலுவலர்களையோ தடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
பொதுமக்கள் இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102, 104 மற்றும் பொது சுகாதாரத்துறை 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்படி 044-24350496, 24334811, 9444340496 ஆகிய எண்களை தொடர்புக் கொள்ளலாம்.
மேலும் 24 மணி நேரமும் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய்சேய் நல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார். #TNGovernment #homebirthattempt