என் மலர்
நீங்கள் தேடியது "China accident"
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
- வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்டே நகரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்று பள்ளி வாசலில் மோதியது. இதில் ஏராளமான குழந்தைகள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியிலும், ஆஸ்பத்திரியிலும் குவிந்தனர்.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹேனான் மாகாணத்தில் இருக்கும் ஸுமாடியான் நகரில் உள்ள பரபரப்பான சாலை வழியாக இன்று காலை ஏராளமான வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.
