search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinese Man"

    • தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    சீனாவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.

    விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் ஜியாஜியா அழத் தொடங்கினாள்.

    இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து, இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்பியவுடன் நீ டிவி பார்க்க மீண்டும் தொடங்கலாம் என்று கூறி உள்ளார்.

    ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தார். பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    இந்த வீடியோ ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியா தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும் அவர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.
    • கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.

    கவுமிங் மார்டென்ஸ் என்பவரை அவரது 4 வயதில் சீனாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்து டச்சு தம்பதியர் தத்தெடுத்தனர். மார்டென்ஸ் 12 வருட நீண்ட தேடலுக்கு பிறகு இறுதியாக தனது பெற்றோரை கண்டுபிடித்தார்.

    மார்டென்ஸ் 1994-ம் ஆண்டு தனது மூன்று வயதில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து அவரது தாயின் சொந்த ஊருக்கு பெற்றோருடன் பயணிக்கும்போது தொலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டது.

    கருணை உள்ளம் கொண்டவர்கள் அவரை ஒரு அனாதை இல்லத்திற்கு அனுப்பினர். அங்கு 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.

    மார்டென்ஸ் வளர்ப்பு பெற்றோர்கள் அவரை பெற்றோரைத் தேடுவதை ஆதரித்தனர். மேலும் 2007-ல் இவர்களது குடும்பம் சீனாவுக்கு சென்று விசாரித்தது. ஆனால் அங்கு அனாதை இல்லம் இல்லை. இருந்தாலும் மார்டென்ஸ் தனது தேடலைத் தொடர்ந்தார். ஐந்தாண்டுகள் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொண்டு, பகுதிநேர வேலை செய்தார்.

    2012-ல் அவர் தன்னை Baby Come Home-ல் பதிவு செய்தார். இது மக்கள் தொலைந்து போன குடும்பங்களைக் கண்டறிய உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ நடவடிக்கையாகும். மேலும் தன்னார்வலர்களின் உதவியுடன் தனது பிறந்த பெற்றோரைத் தேடினார்.

    மார்டென்ஸ் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் பட்டமும், கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இறுதியாக கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.

    அவரைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் காவ் யாங் என்ற குழந்தையைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. மார்டென்ஸின் வளர்ப்பு தாய் இந்த செய்தி தெரிவதற்கு முன்பு இறந்துவிட்டார். வளர்ப்புத் தந்தை தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

    மனநலக்கோளாறால் அவதிப்பட்ட அவரது தாய் வென்னை பார்த்தபோது யாங்யாங் என்ற பெயரில் அழைத்தார். இந்த கதை சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.

    மார்டென்ஸ் கதை துரதிர்ஷ்டவசமாக ஆரம்பித்த போதிலும், அவரது பிறந்த குடும்பம் மற்றும் வளர்ப்பு குடும்பம் இரண்டும் அன்பால் நிறைந்ததால் இறுதியில் அவர் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்துள்ளனர்.

    • லீயை திருமணம் செய்து கொள்வதற்காக ஜியாபாங்க் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.
    • ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

    சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த ஜியாபாங்க் (23) என்ற பெண், அங்கு லீ என்ற முதியவரை சந்தித்தார். இருவரும் விரைவில் நெருங்கிய நண்பர்களாகினர். இறுதியில் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    ஜியாபாங்க் குடும்பத்தினர் அவரது உறவை ஏற்கவில்லை என்ற போதிலும், லீயை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.

    சமீபத்தில் லீ-ஜியாபாங்க் ஜோடி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

    இந்த ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

    முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். லீயுடன் எதுவும் சாத்தியம் என்று அவர் கூறி உள்ளார்.

    லீயின் முதிர்ச்சி, நிலைப்புத்தன்மை மற்றும் ஞானம் ஆகியவற்றால் அந்த பெண் ஈர்க்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

    ×