search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chips packet"

    • எல்லோரையும் போல் முதியவர் பாக்கெட்டை விரல்களால் திறக்க முயன்றார்
    • தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் பராமரிப்பு பணியாளர்கள் செயல்பட்டனர்

    அமெரிக்காவின் தென்மேற்கில் உள்ளது ஜியார்ஜியா (Georgia) மாநிலம். இங்குள்ள நகரம், டால்டன் (Dalton).

    இங்கு வசித்து வந்த 75 வயது முதியவர் ஒருவர், உண்பதற்காக ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வாங்கினார். ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், எல்லோரையும் போல் அந்த பாக்கெட்டை தனது விரல்களால் திறக்க முயன்றார்.

    ஆனால், அவரால் அந்த பாக்கெட்டை திறக்க முடியவில்லை.

    சிறிது நேரம் போராடி பார்த்து பொறுமையிழந்த அவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டரை எடுத்து, அந்த பாக்கெட் ஓரத்தில் தீயை காட்டினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடலில் தீ பற்றி, மளமளவென அவரது உடல் எரிய தொடங்கியது.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பராமரிப்பு பணியாளர்கள் சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வரும் வரையில் காத்திருக்காமல், பராமரிப்பு பணியாளர்கள், ஒரு பெரிய நீர் குழாய் வழியாக, எரிந்து கொண்டிருந்த அந்த முதியவர் மீது நீரை பாய்ச்சி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதற்குள் தீயணைப்பு வீரர்களும், மருத்துவ அவசர சேவை பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    தொடர்ந்து, டென்னிசி மாநில சட்டனூகா (Chattanooga) பகுதியில் உள்ள எர்லாங்கர் பேரோனெஸ் மருத்துவமனையில் (Erlanger Baroness Hospital) அவர் சேர்க்கப்பட்டார்.

    தீ விபத்து காரணமாக அந்த முதியவருக்கு உடலில் 75 சதவீத காயங்கள் ஏற்பட்டிருப்பதாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

    சிப்ஸ் பாக்கெட்டில் தீ பற்றி, அது அவர் மேல் பரவியதா அல்லது அவர் தன் உடல் மேல் கவனக்குறைவாக தீ வைத்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    ஆனால், சிப்ஸ் தயாரிப்பில் எண்ணெய் மற்றும் மாவு பயன்படுத்தப்படுவதால், அவை தீப்பற்ற கூடிய பொருட்கள்தான் என உணவு பொருள் தயாரிப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் தான்.
    • சிறுவர்கள் விரும்பும் நொறுக்கு தீனிகளில் ‘சிப்ஸ்’ பாக்கெட்டும் ஒன்று.

    பெங்களூரு :

    குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட பலருக்கும் நொறுக்கு தீனி சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் தான். பெற்றோருடன் வெளியே செல்லும் குழந்தைகள் செல்லும் வழியில் பார்க்கும் கடைகளில் பல வண்ண நிறங்களில் பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து தொங்கவிடப்பட்டு இருக்கும் நொறுக்கு தீனி அடம்பிடித்து கேட்டு வாங்கி ருசித்து வருகிறார்கள். சிறுவர்கள் விரும்பும் நொறுக்கு தீனிகளில் 'சிப்ஸ்' பாக்கெட்டும் ஒன்று. இந்த நிலையில் குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் கடை, கடையாக சென்று 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை முண்டி அடித்து கொண்டு வாங்கும் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

    அதாவது ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா உன்னூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக 'சிப்ஸ்' பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் தின்பண்டங்களுடன் சேர்த்து 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தான் காரணம்.

    சுமார் 5 நிறுவனங்களின் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இதுபோன்று 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைகளுக்கு சென்று அந்த 5 நிறுவனங்களின் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை வாங்க போட்டா போட்டி போட்டனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை வாங்கியதில் சுமார் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாக அந்த கிராமத்தினர் கூறுகின்றனர்.

    மேலும், கடைகளில் இருந்த அனைத்து 'சிப்ஸ்' பாக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இதையடுத்து மீண்டும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்த 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை மக்கள் முண்டியடித்து வாங்கினர். ஆனால் அவற்றில் எந்த பணமும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும், தங்களது நிறுவன சிப்ஸ்களை பிரபலப்படுத்த அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ரூபாய் நோட்டுகளை பரிசாக வைத்திருக்கலாம் என்றும், 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் அசலா? அல்லது போலியா? என்ற சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்த 'சிப்ஸ்' பாக்கெட் விவகாரம் அப்பகுதி மக்கள் மத்தியில் ருசிகர விவாதமாகவும், பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்றால் மிகையல்ல.

    ×