search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema Theatre"

    • சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார்.
    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சினிமா தியேட்டர் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.

    அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினர். அப்போது உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை.

    எனவே அங்கு வரும் குப்பையில் உள்ளதா? என்று பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்துவிட்டதாக தகவல் தரப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க காப்பை பெற்றுச் மகிழ்ச்சியுடன் சென்றனர். தியேட்டரில் தவறவிட்ட தங்க காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    கேரளாவில் தியேட்டரில் சினிமா பார்க்கும் போது இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

    சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



    மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதைவைத்து  தொழில் அதிபரான மைதீன்குட்டியை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் போஸ்கோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

    இதற்கிடையில் சிறுமிக்கு தியேட்டரில் பாலியல் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும், அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.  

    இந்நிலையில், இவ்வழக்கில் சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயாரும் தொழில் அதிபர் அருகே இருந்து உள்ளார். ஆனால் முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்தபோது அதனை அவர் தட்டிக்கேட்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தாயாரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. 
    ×