search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civil supply sector"

    • புதுவை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. அப்போது குடிமைபொருள் வழங்கல் துறையின் மூலம் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்க வேண்டும்
    • பிறகு ஒரு மாதத்தில் அந்த குறைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. அப்போது குடிமைபொருள் வழங்கல் துறையின் மூலம் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    மேலும் சிலர் துறையின் மீது சில குறைகளை கூறினர். எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வழிகாட்டுதலின்படி குடிமைபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் மாதந்தோறும் 2-ந் தேதி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் துறை அமைச்சர் மற்றும் இயக்குநர் தலைமையில் அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் இதில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு தங்கள் தொகுதிகளில் குடிமைபொருள் வழங்கல் துறை சம்பந்தமாக உள்ள குறைகளை தெரிவிக்கலாம்.

    பிறகு ஒரு மாதத்தில் அந்த குறைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்நிலையில் இன்று (2-ந் தேதி) சட்டசபையில் கூறியது போல் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் காலை 9 மணிக்கு குறைப்பு தீர்ப்பு கூட்டம் தொடங்கியது.

    இதனை அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் இயக்குநர் சக்திவேல், உதவி இயக்குநர் சமபத், துணை இயக்குநர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு சரியான முறையில் அரசின் சலுகைகள் கிடைக்கும் வகையில் அவர்களை கண்டறிந்து சிவப்பு ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் அவர்களை கண்டறிந்து மஞ்சல் கார்டு மாற்றி தரவேண்டும். வசதி படைத்த மேல்தட்டு மக்களை எவ்வாறு கண்டறிந்து பச்சை ரேஷன் கார்டு வழங்ககுவது உள்ளட்டவைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    பிறகு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பகுதிகளில் யாரேனும் தகுதியற்றவர்கள் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருப்பதாக புகார் தெரிவித்தால் அவற்றை உடனடியாக நீக்கி தகுதி உடையவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். புதுச்சேரியில் முதல் முறையாக நடந்த இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

    ×