என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Climate"
- 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.
- கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது.
கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.
2010 -ல் பெரும்பாலும் வறண்டது. 'ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. 1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது.
இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன. இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது. இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஜூலை மாத வெப்பநிலை இம்முறை கணிசமாக உயர்ந்துள்ளது
- 1,20,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு சூடாக இருந்ததில்லை
நிறைவடைய போகும் ஜூலை மாதம் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாதமாக அமையப்போகிறது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வருகின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில், "இதுவரை உலகில் பதிவான வெப்பநிலைகளிலேயே ஜூலை 2023 மாத வெப்பம்தான் அதிகமானதாக இருக்கும்" என தெரிகிறது.
தொழில்துறை புரட்சி காலகட்டங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த சராசரியை விட இம்மாத சராசரி உலக வெப்பநிலை, சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் 174 ஆண்டுகளுக்கான வெப்ப பதிவுகளில் அதிகமானதாக ஜூலை 2019-ஐ பதிவாகியிருந்தது. 2023 ஜூலை மாத வெப்பநிலை அதையும் விட 0.2 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு இக்கருத்துக்களை அமோதிக்கிறது.
ஜூலை மாதத்திற்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை வழக்கமாக 16 டிகிரி செல்சியஸ் எனும் அளவில்தான் இருக்கும். ஆனால் இந்த ஜூலையில் அது 17 டிகிரி செல்சியஸிற்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.
"நமது புவியில் இதே போன்ற அதிக வெப்ப பதிவுகளை ஆராய்ந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அல்லது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும் " என்று லெய்ப்சிக் பல்கலைகழகத்தின் வானிலையியல் ஆய்வாளர் கூறினார்.
பனிக்கட்டிகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கிடைக்கும் பதிவுகளில் இருந்து 1,20,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு சூடாக இருந்ததில்லை என்று தெரிகிறது.
கிரேக்கத் தீவான ரோட்ஸ், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகள், வடமேற்கு சீனா, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் அதிக வெப்பம் சமீப காலங்களில் மிகவும் பேசுபொருளானது.
கடல் நீர் மட்டுமல்லாது உலகின் குளிர்ச்சியான அண்டார்டிகா பனி பிரதேசத்திலேயே வெப்பநிலை உயர்ந்துள்ளது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்