search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CMRL"

    • Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம்.
    • அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு.

    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது.

    • தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர்.
    • இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    சென்னை மெட்ரொ இரயில் நிறுவனம் சென்னையில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை 2015 ஆம் ஆண்டில் இருந்து சேவையை வழங்கி வருகிறது.

    மெட்ரோ தொடங்கிய ஆரம்பத்தில் மக்கள் மெட்ரோ சேவையை குறைவாகவே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இச்சூழல் மாறிக்கொண்டே வருகிறது. தற்பொழுது அடிக்கிற வெயிலில் சென்னை மெட்ரோவில் மக்கள் செல்ல அதிகம் விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு வேகமாகவும் டிராஃபிக்கில் சிக்காமல் செல்ல முடிகிறது.

    இதுகுறித்து தற்பொழுது சென்னை மெட்ரோ நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் அறிக்கையை பதிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 80 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக கடந்த மாதம் 8 ஆம் தேதி 3.24 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தற்பொழுது சென்னை மெட்ரோ சேவை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாது.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செயலி, பேடிஎம், சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டு பயன்படுத்த வலியுறுத்தல்.

    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகள் டிக்கெட்டுகள் பெற பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செயலி, பேடிஎம், சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டு போன்றவை மூலம் டிக்கெட் பெற்று பயணிகள் பயணம் மேற்கொள்ள முடிவும்.

    அதேபோல் வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) மூலமாகவும் வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். ஆனால் தற்போது வாட்ஸ்அப் சாட்பாட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை என சென்னை மெட்ரோ ரெயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மேற்கொண்ட மற்ற வசதிகைள பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. பயணிகளில் அசௌகரித்திற்கு வருந்துவதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டபின் அதுகுறித்து அப்டேட் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • பிரத்யேக உதவி எண் பெண்களால் இயக்கப்படுகிறது.
    • ஆதரவு வழங்குவதற்காக புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    மகளிர் உதவி எண் 155370 முழுக்க முழுக்க பெண்களால் 24/7 முறையில் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது, இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    முன்னதாக பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற பின்க் ஸ்குவாட் என்ற பெண் பாதுகாப்பு பணியாளர்கள் குழு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும், நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
    • 119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர், கோயம்பேடு- ஆவடி ஆகிய 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

    கோயம்பேடு- ஆவடி மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

    119 கி.மீ. நீளத்திற்கு நடைபெற உள்ள மெட்ரோ ரெயில் பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம்.

    பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

    நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. அந்த வகையில், போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை பாராட்டும் வகையிலும், அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் லண்டன் பாராளுமன்றத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு "கிரீன் ஆப்பிள் சுற்றுச்சூழல் விருது" வழங்கப்பட்டு இருக்கிறது.

    கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ ரெயில் இந்தியா நிறுவனம் தங்கம் வென்றதை அடுத்து இந்த விருதுக்கான சான்றிதழ் மற்றும் பச்சை நிற ஆப்பிள் சின்னம் ஒன்றும் கோப்பையாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    • தெற்கு ரெயில்வேயின் மின்சார ரெயில் சேவை நிறுத்தம்.
    • சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

    சென்னையில் நாளை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    பராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கு ரெயில்வே சேவைகள் நாளை காலை 10.18 மணி முதல் மதியம் 14.45 மணி வரை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

    நீட்டிக்கப்பட்ட சேவை விவரம்:

    நீல வழித்தடம்: விம்கோ நகர் பணிமனை - விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 08.00 முதல் 11.00 முதல், மாலை 05.00 முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

    பச்சை வழித்தடம்: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - பரங்கிமலை மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் ரெயில் இயக்கப்படுகிறது.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - விமான நிலையம் (வழி- கோயம்பேடு) மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

    • டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்.
    • மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இன்றைய போட்டி காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போட்டிக்கான டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    அதன்படி ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். ஆனால், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது.

    பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளில் இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது.

    • போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம்.
    • சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி இது ஆகும்.

    இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி போட்டியை காண வரும் ரசிகர்கள் போட்டி முடிந்து திரும்பும் போது சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் மேற்கொள்ள முடியும்.

    ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் அரசினர் தோட்டம் ரெயில் நிலையம் வருவதற்கான டிக்கெட்களை ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

    • போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    • புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து விட்டது. சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ. 100 எனும் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றுலா அட்டையின் விலை ரூ. 150 ஆகும். இதில் ரூ. 50 பயண அட்டையில் வைப்பு தொகையாக திருப்பி ஒப்படைக்கப்பட்டு விடும். வார இறுதி நாட்களில் புதிய ஒருநாள் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த சுற்றுலா அட்டையின் கால அவகாசம் ஒருநாள் மட்டும்தான். அந்த வகையில் பயனர்கள் ஒருநாள் முடிவில் சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் போது ரூ. 50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

    • மெட்ரோ ரெயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு நடைபெற்று வந்தது.
    • ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்தது.

    தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிலையில், திருநெல்வேலி, சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்து இருக்கிறது.

    அதில், திருநெல்வேலியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கிலோமீட்டர், பாளையம்கோட்டை முதல் பொன்மாக்குடி வரை 12.03 கிலோமீட்டர், சங்கர் நகர் முதல் வசந்த நகர் வரை 14.65 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று, திருச்சி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கும் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சேலம் மாவட்டத்தில் கரபுரநாதர் கோயில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரெயில் நிலையம் வரை 17.16 கிலோமீட்டர், கருப்பூர் முதல் சேலம் இரெயில் நிலையம் வழியாக நல்லிகலப்படி வரை 18.03 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றுவிட்டன. இன்று சென்னையில் நடைபெற இருக்கும் முதல் குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    முன்னதாக நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மெட்ரோ ரெயில் உடன் கூட்டணி அமைத்து- சேப்பாக்கத்தில் போட்டியை காண மெட்ரோ ரெயில் மூலம் வரும் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கி வந்தது. அந்த வகையில், இன்று நடைபெற இருக்கும் குவாலிபையர் போட்டிக்கும் சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்றைய குவாலிபையர் போட்டியை காண சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரெயில் பயணம் வழங்கப்படாது என்று தெரியவந்துள்ளது. இன்றைய போட்டியை பிசிசிஐ நடத்துவதால், சேப்பாக்கத்தில் வழங்கப்படும் டிக்கெட்களை கொண்டு ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது.

    லீக் சுற்று ஆட்டங்களை போன்றே, குவாலிபையர் போட்டிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.

     

     

    இன்று (மே23) மற்றும் நாளை (மே 24) நடைபெற இருக்கும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய, வாட்ஸ்அப் சாட்பாட்-இல் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்ய வாட்ஸ்அப்-இல் இருந்த படி 8300086000 என்ற எண்ணிற்கு Hi என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பின் வரும் வழிமுறைகளை பின்பற்றி டிக்கெட்களை வாட்ஸ்அப் செயலியிலேயே எடுக்கலாம். இது தவிர, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது சிஎம்ஆர்எல் மொபைல் செயலி மூலமாகவும் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், சென்னை மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணிக்கு பிறகு டிக்கெட் கவுண்டர்கள் இயங்காது என்பதால், பயனர்கள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளில் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம். 

    ×