என் மலர்
நீங்கள் தேடியது "Co-products"
- பருவமழை துவங்கி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
- பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை:
உடுமலையில் நடந்த தென்னை விவசாயிகள் மாநில மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பருவமழை துவங்கி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால் பயிருக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், தனியார் நிறுவனங்கள் அவற்றை பதுக்கி வருவதோடு இணை பொருட்கள் வாங்க வேண்டும்என வலியுறுத்துகின்றனர். எனவே கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வினியோகம் செய்ய வேண்டும்.தமிழக பயிர் சாகுபடிக்கு ஏற்ப, உர வகைகள் இறக்குமதி செய்யப்படாததால் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் உரங்கள் கிடைக்காத சூழல் உள்ளது. இப்பிரச்னைக்கு, அரசு முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சிமலையில், ஒரு கி.மீ., தூரத்திற்கு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள், விவசாயிகள் மட்டுமன்றி மலைமேலுள்ள நகரங்களும் பாதிக்கும் சூழல் உள்ளது.இத்தீர்ப்பு குறித்து கேரள அரசு ஏற்கனவே மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து, முன்னதாகவே நீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடியை அதிகரிக்கும் வகையிலும்விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் குடும்பத்திற்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். குறைந்தபட்சம்ஒரு ஹெக்டர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி தொகுப்பு மாற்ற வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.