search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Code of Conduct breach"

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் வங்காளதேச வீரர் ருபெல் ஹொசைன் ஐசிசி நன்னடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #AFGvBAN #RubelHossain #ICC

    டேராடூன்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. அதன்படி நடந்த முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியின்போது வங்காளதேச வீரர் ருபெல் ஹொசைன் ஐசிசி விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது 11-வது ஓவரை ஹெசைன் வீசினார். அந்த ஒவரில் அவர் வீசி பந்து ஒன்று ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் சமியுல்லா ஷென்வாரியின் கால்காப்பில் பட்டது. இதையடுத்து ஹொசைன் எல்.பி.டபுல்யூ. அப்பீல் செய்தார். ஆனால் அது விக்கெட் இல்லை என்பதால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ஹொசைன் அம்பயர் மீது கோபப்பட்டு சிறிது நேரம் பந்துவீசாமல் இருந்துள்ளார். 

    இந்த செயல் வீரர்களின் நன்னடத்தை விதிக்கு மாறானது. இதனால் போட்டி நடுவரிடம் இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹொசைன் தனது தவறை ஒப்புகொண்டதோடு, அதற்கான தண்டனையையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவருக்கு போட்டி சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.  #AFGvBAN #RubelHossain #ICC
    ×