search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inspect"

    • பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலை பார்வையிட்டார்.
    • ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

    கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலையும் பார்வை யிட்டார். தொடர்ந்து அவர் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.56 லட்சம் மதிப்பீட்டில் மைலப்பபுரம் முதல் நெல்லையப்பபுரம் வரை அமைக்கப்பட்ட சாலை யையும், வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், செயலாளர் மாரியப்பன் ரவண சமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன், கோவிந்தப்பேரி பஞ்சாயத்து தலைவர் டி.கே. பாண்டியன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் . வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள இடிந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என்று புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் புளியங்குடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் உள்ள அரசு கல்வி நிலையங்களில் தென்காசி மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள இடிந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என்று புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.

    அதனை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் புளியங்குடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன், ஆணையாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர்கள் கணேசன், கைலாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • குன்னூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆரம்ப பள்ளி, ஆர்.சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முரளிதரன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் ஆதார் எண்ணை சுயவிருப்பத்துடன் இணைத்தல், தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, படிவங்கள் உரிய வழிமுறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2023-ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு, அதாவது 1.1.2005-க்கு முன்னர் பிறந்த தகுதியுடைய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை மேற்கொள்ளவும், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் தொடர்பான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த 9-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    தேனி மாவட்டத்திலுள்ள 536 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 26 மற்றும் 27-ந்தேதிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்களும் நடைபெறவுள்ளது என்றார்.

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதையொட்டி கலெக்டர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். கம்பம் மெட்டு சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்புகுழுவினர்கள் மூலம் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு மரங்கள் அகற்றப்பட்டது. குன்னூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    • ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பய ன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, நாகலாபுரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஓடையில் நீர்செறிவூட்டு குழி அமைத்தல் மற்றும் வாய்கால் சீரமைக்கும் பணி, தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை,

    15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.01 லட்சம் மதிப்பீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் புனரமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.84 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய பேவர்பிளாக் கற்கள் சாலை அமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேசன் விலைக்கடை கட்டுமானப்பணி,

    நாகலாபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணி,

    சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமா னப்பணி, தாடிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வர்ணம் பூசும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.88 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை கல் மற்றும் கம்பி வேலி அமைக்கப்பட்டு வரும் பணி,

    தப்புக்குண்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரணியில் படித்துறை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி மற்றும் பராமறிப்பு பணி, மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் புனரமைப்பு பணி,

    தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேக்கரி மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் அலகு சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.94.43 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பய ன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.

    • ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
    • கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான உபகரணங்கள், அவற்றின் செயல்பாடுகள், மருந்து, மாத்திரைகளின் இருப்பு குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டப்பராஜபுரம் மற்றும் கண்டமனூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

    க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டப்பராஜபுரம் மற்றும் கண்டமனூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டம், 15-வது நிதிக்குழு மானியம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்,

    ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம், உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, எட்டப்பராஜபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவிடும் கருவி, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் அரசின் அட்டவணைப்படி முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும்,

    வழங்கப்படும் உணவின் தரம், உணவு பொருட்களின் இருப்பு அதற்கான பதிவேடுகள் குறித்தும், கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கால்நடை ஆஸ்பத்திரியில் வெளிசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த கால்நடைகளின் எண்ணிக்கை தொடர்பான பதிவேடுகள், சிகிச்சை அளிக்கப்படும் முறை, கால்நடைகள் சிகிச்சைக்கான உபகரணங்கள், அவற்றின் செயல்பாடுகள், மருந்து, மாத்திரைகளின் இருப்பு குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.
    • மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு அணை பகுதியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைய உள்ள பகுதியில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு நடத்தினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இங்கு சாகச பூங்கா மற்றும் இளைஞர்களுக்கான அறிவியல் மையமும் அமைக்கப்படுகிறது.

    இந்த திட்டங்கள் 23.6 ஏக்கர் இடத்தில் 2 பிரிவுகளாக அமைகிறது என்றார்.

    • வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

    வட்டாட்சியர் அலுவலகத்தில், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை,

    குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதற்கான பதிவேடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம்,

    15-வது நிதிக்குழு மானியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள்,

    முடிவுற்ற பணிகள், அதற்கான பதிவேடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    • தேனி மாவட்டம் முழுவதும் 31-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
    • கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்து முககவசம் அணியவும் வலியுறுத்தினார்.

    தேனி:

    கொரோனா நோய்த் தொற்று பரவுதலை தடுத்திடும் பொருட்டு, தமிழக அரசின் வழிக்காட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் உள்ளதால் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த் தொற்றின் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திட தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, விடுபட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் இன்று மாவட்டம் முழுவதும் 31-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

    தேனி நாடார் சரஸ்வதி பாலார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்பத்டுதினார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • பணியை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு என கலெக்டர் முரளிதரன் அறிவுறுத்தினார்.

    தேனி:

    வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் நலத் திட்டங்களை செயல்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துவதே அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்த தொகுப்புகளில் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள், விதை, நாற்றுகள் வழங்குதல், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக புதர்களை நீக்கி, நீர் பாசன வசதி ஏற்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கமான நிகர சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கப்படும்.

    தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டில் ேதர்வு செய்யப்பட்ட 13 கிராம பஞ்சாயத்துகளில் 20 தொகுப்புகள் கண்டறியப்பட்டு 422 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளில் 10 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி கிராம பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்ட 3-வது தொகுப்பில் 23 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 510 அடி ஆழத்தில் ரூ.1.54 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்துளை கிணற்றுக்கு தேவையான மின் மோட்டார், புதிய இலவச மின் இணைப்பு மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் முரளிதரன் ெதரிவித்தார்.

    ×