என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்டமனூர் கால்நடை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
- ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
- கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான உபகரணங்கள், அவற்றின் செயல்பாடுகள், மருந்து, மாத்திரைகளின் இருப்பு குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டப்பராஜபுரம் மற்றும் கண்டமனூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டப்பராஜபுரம் மற்றும் கண்டமனூர் ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டம், 15-வது நிதிக்குழு மானியம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்,
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம், உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, எட்டப்பராஜபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவிடும் கருவி, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் அரசின் அட்டவணைப்படி முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும்,
வழங்கப்படும் உணவின் தரம், உணவு பொருட்களின் இருப்பு அதற்கான பதிவேடுகள் குறித்தும், கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கால்நடை ஆஸ்பத்திரியில் வெளிசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த கால்நடைகளின் எண்ணிக்கை தொடர்பான பதிவேடுகள், சிகிச்சை அளிக்கப்படும் முறை, கால்நடைகள் சிகிச்சைக்கான உபகரணங்கள், அவற்றின் செயல்பாடுகள், மருந்து, மாத்திரைகளின் இருப்பு குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்