என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Committee Meeting"

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது.
    • பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

    கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், சடடமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் செல்வராஜ், மணி, அன்வர்கான், மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, பி.ஆர்.செந்தில்குமார் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வருகிறது. மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாகவும், எழுச்சியோடும் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதிக்குள் வீடுதோறும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கிளை, வட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பாகங்களுக்கு உடனடியாக பூத் கமிட்டி குழுவை நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத்தில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கேஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத் தில் நடக்கிறது.

    மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரா ளுமன்ற தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), ந.செந்தில் (காரைக்குடி), மருத்துவர் யாழினி (சிவ கங்கை). எஸ்.தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தல் பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை வழங்குகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்துவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
    • இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    திருப்பூர்

    தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட காங்கயம் தொகுதி பொறுப்பாளர் உமாராணி, மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் சித்–திக், தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ்மறை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை வரும் ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தொண்டர்கள் தங்கள் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    மூலனூர் குட்டை முருங்கைக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்பு செய்ததற்கு விவசாயிகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பட்ஜெட்டில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் திட்டம் தொடங்கப்படும் என்று அறி–வித்த முதல்-அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் ஒன்றிய, நகர, முத்தூர் பேரூர் கழக தி.மு.க. செயற்குழு கூட்டம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உமாராணி முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும்ஆலோசி க்கப்பட்டது.இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன்,நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், முத்தூர் பேரூர்செயலாளர் செண்பகம் பாலு மற்றும் வாக்குச்சாவடி ஒருங்கிணை ப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
    • உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் பேசியதாவது:- காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஊராட்சி சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலைகள் ஊராட்சி வசமே இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலை மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை ஊராட்சிகளுக்கு வழங்கி அதன் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களான செல்வம் ராமசாமி, தாபினி மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, ஐயனார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது.
    • புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி புதுவை தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் புதுவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழர்கள் அனைவரும் வியக்கும் வகையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, புதுவை அரசு நடத்தும் உலகத் தமிழ் மாநாட்டிற்கு புதுவை தமிழ்ச் சங்கம் அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து மாநாட்டை வெற்றி பெற செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

    புதுவை அரசு அறிவித்துள்ள தமிழ் சிறகம் அமைப்பது என்பதனை மாற்றி தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரில் ஒரு துறையை உருவாக்கி தமிழின் மேன்மையை மேலும் உயர்த்திட வழிவகை காண வேண்டும்.

    புதுவையில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், ஆட்சி பரப்பு மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.) மூலம் படிக்கின்ற மாணவர்களுக்கு தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து தெரிவித்தார்.

    • திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி பா.ஜனதா சார்பில் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருபுவனை தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பாலகுமார், செயலாளர் மோகன்ராஜ், பயிற்சி தலைவர் அமரீத், சத்யநாராயணன், விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு கூட்டத்துக்கு புதுவை பா.ஜனதா மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஆனந்தன், மாநில விவசாயி தலைவர் புகழேந்தி, பயிற்சி அணி தலைவர் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, பாஸ்கரன், எஸ்.சி. அணி செயலாளர் வீரப்பன், மாவட்ட விவசாயி தலைவர் சச்சிதானந்தம் ஆகியோர் பேசினார்கள்.

    மதகடிப்பட்டு வார சந்தை தரம் உயர்த்தப்பட்டது, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கியது, திருபுவனை தொகுதியில் புதிய சாலை அமைத்து வருவது, புதுவை மாநில சட்டசபையில் முழு பட்ஜெட் அறிவிக்க வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளைஞர் அணி செயலாளர் விக்ரம் நன்றி கூறினார்.

    • பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.
    • போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் உற்பத்தி குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது இதில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மோகனா, மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்விக் குழு கூட்டம், 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஆணையாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதில், கல்வி வளர்ச்சி, பள்ளி கட்டிட பராமரிப்பு, உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மங்கையர்க்கரசி கனகராஜ் பேசுகையில். கோடங்கிபாளையம் மற்றும் பருவாய் கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.மேலும் பள்ளிகளின் அருகாமையில் அரசு தடை செய்துள்ள பாக்கு உள்ளிட்ட போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதை காவல்துறை மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பொது நோக்கங்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், அருள்புரம், புளியம்பட்டி ஆகிய சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், நாய்கள் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படுவதால், சுற்றுச்சுவர்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல நோய்கள் பரவுவதை தடுக்க குடிநீரில் குளோரின் மருந்து கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், பல்லடம் துணை தாசில்தார் பானுமதி, மின்வாரிய உதவிப் பொறியாளர் தங்கராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பாபு,ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.
    • சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க கூடாரங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.பி.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கத்தின்கவுரவ ஆலோசகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ்.கவுரிசங்கர், பொருளாளர் ஏ.டி.சி.பழனிச்சாமி, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால், செயலாளர் கங்கா எஸ்.சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உள்பட சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வக்கீல் எஸ்.குமார் தலைமையில் துணைத்தலைவர் அபிராமி அசோகன் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் லோகுபிரசாத் (திமுக) பேசுகையில்: கள்ளகிணறு கருப்பராயன் கோயில் முதல் லட்சுமி நகர் வரை தார் சாலை அமைத்தல் பணி முடிந்து அதனை தொடர்ச்சியாக உள்ள மண் சாலை வழியாக, ஒரு பாலம் அமைத்து கொடுத்து மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    ஜோதி பாசு(இ.கம்யூ) : கடகம்திருடியபாளையத்திலிருந்து டி. ஆண்டிபாளையம் வரையிலும், வேலம்பட்டியில் இருந்து மசநல்லாம் பாளையம் வரையிலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை. இதில் மொத்தம் 1400 பயனாளிகளில் 400 பயனாளிகளின் ஆதார் கார்டு இணைப்பு ஆகவில்லை என வேலைக்கு அனுமதிக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். டி. ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக செய்து தர வேண்டும்.

    சுப்பிரமணி(தி.மு.க) : பொல்லிக்காளிபாளையம் செல்லும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக நல்ல காளிபாளையம் வழியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். .ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் பேசுகையில்: பொங்கலூர் ஒன்றியத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஒன்றிய பகுதியில் அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவில் 75 சதம் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 15வது நிதிக்குழு மானியம் நிதியில் அனைத்து ஒன்றிய குழு வார்டு பகுதிகளிலும் 7 பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற அடிப்படை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) மீனாட்சி நன்றி கூறினார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. திருப்–பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதிய உறுப்பினர் சேர்க்கை பணி குறித்தும், கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முறை–யில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.

    கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வருகிற 30-ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிமையை பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை செயலாளர்கள் குமார், நந்–தினி, சேகர், பொருளாளர் சாமிநாதன், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை பொதுக்–குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
    • காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் தலைமை வகித்தாா்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா். இதில் குடிநீா்க் குழாய்களை மேம்படுத்தல், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் பெயா்ந்த பின்னா் தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை ஊராட்சி ஒன்றியத்துக்கு வருவாய் ஏற்படும் வகையில் பயன்படுத்துதல் என்பன உள்ளிட்ட 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    ×