என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "competation"
- 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.
- காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.ஒவ்வொரு போட்டியிலும், 14, 17 மற்றும், 19 வயது மாணவ, மாணவிகள் பிரிவில் மாநகராட்சி, அரசு, தனியார் பள்ளி அணிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றன. அனைத்து குழு விளையாட்டு போட்டிகளும் முடிந்த நிலையில், தடகள போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு குறுமைய தடகள போட்டிகள் வருகிற 12, 13ம் தேதி 2 நாட்கள் நடக்க இருந்தது. ஆனால் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், தற்காலிகமாக குறுமைய தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்து குறுமையங்களிலும் தடகள போட்டிகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறுமைய போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- வருகிற 15, 17-ந் தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
- சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தாய் மண்ணுக்குப் பெயா் சூட்டிய தனயன்', 'மாணவா்க்கு அண்ணா', 'அண்ணாவின் மேடைத் தமிழ்', 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்', 'பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்', 'அண்ணாவின் தமிழ் வளம்', 'அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி !' 'மக்களிடம் செல்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தொண்டு செய்து பழுத்த பழம்', 'தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்', 'தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்', 'தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம்', 'தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'தந்தை பெரியாரும், பெண் விடுதலையும்', 'தந்தை பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும்', 'பெண் ஏன் அடிமையானாள்?', 'இனிவரும் உலகம்', 'சமுதாய விஞ்ஞானி பெரியாா்', 'உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலராலும், கல்லூரி போட்டிக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநராலும் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே பங்கேற்ற இயலும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
- 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் இளம் கலைஞர்களுக்கான பாட்டு போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஹார்வே குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் குழுவினர் தேர்வு செய்தனர். இதில் பிரிவு வாரியாக முதல் பரிசு ரூ.6 ஆயிரம் , இரண்டாம் பரிசு ரூ.4,500 மற்றும் 3-வது பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்ற வெற்றியாளர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்பர் எனத்தெரிவிக்கப்பட்டது.
இசைக்கருவி இசைத்தல் பிரிவில், நாதஸ்வரம் - கோவிந்தராஜ் (அவிநாசி), தவில் - சங்கிலிதுரை (அலங்கியம்), நாதஸ்வரம் - கிருஷ்ணகுமார் (முத்தூர்).பரதம் பிரிவில், மோனிகா ஜெயஸ்ரீ (அனுப்பர்பாளையம்), சக்தி பிரியா (பாளையக்காடு), யாஷ்னா (முதலிபாளையம்). பாட்டு - மகிழன்பருதி (கருமாரம்பாளையம்), சண்முக பாக்யஸ்ரீ (திருப்பூர்) மற்றும் காயத்ரி (ராக்கியாபாளையம்).கிராமிய நடனத்தில், ஸ்ரீவர்தினி, சன்மதி, சங்கர் ஆகியோரும் ஓவியத்தில் சரண், திரிநேத்ரா, ஜெகன் ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.
- பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்த முடிவு
- மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது.
திருப்பூர் :
திருப்பூரில் மாதம் தோறும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் தீவிர துப்புரவு இயக்கம் மேற்கொண்டு அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் தூய்மைப் பணி மேற்கொள்ள முடிவு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாளை தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது. தூய்மைப் பணி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகம் அடங்கிய போஸ்டர் உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்தது.
- நெருப்பெரிச்சல் திருமுருகன் பள்ளியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் முதலிடம் பிடித்தார்.
- சிறப்பாக விளையாடிய, 25 பேருக்கும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
உடுமலை :
தமிழக அரசு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வருகிற ஆகஸ்டு மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடத்துகிறது.இதில் பார்வையாளராக பங்கேற்க ஒவ்வொரு மாவட்ட அளவிலும், ஒரு சிறுவர், சிறுமியர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காக 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படுகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிதிருப்பூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் ஏஞ்சல் என்ஜினீயரிங் கல்லுாரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் போட்டியைத் துவக்கி வைத்தார். மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலிருந்தும் 120 மாணவர்கள், 80 மாணவிகள் பங்கேற்றனர்.
தலைமை நடுவர் உமாபதி தலைமையில் மனோகரன், லிங்கேஷ், அருண்குமார், கண்ணன், செல்வராஜ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.
இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் நெருப்பெரிச்சல்திருமுருகன் பள்ளியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் முதலிடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் உடுமலை ஸ்ரீநிவாசா வித்யாலயா பள்ளி மாணவி சந்தியா முதலிடம் பிடித்தார்.இருவரும் ஆகஸ்டு மாதம் நடக்கும் 44வது உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை காண,தமிழக அரசு செலவில் சென்னை மாமல்லபுரம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.பரிசளிப்பு விழாவில் மாநில முன்னாள் தலைவர் சிவசண்முகம், பிரன்ட்லைன் பள்ளிகளின் இயக்குநர் சக்தி நந்தன், உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பரிசுகளை வழங்கினர். முதலிடம் பிடித்தவர்களுக்கும், சிறப்பாக விளையாடிய, 25 பேருக்கும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிவன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்