search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confidence vote"

    • பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது
    • போரிஸ் ஜான்சன் பதவி விலகும்படி சொந்த கட்சியினரே வலியுறுத்தி வந்தனர்

    லண்டன்:

    இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

    கடந்த 2020 ஆண்டு கொரோனா முதல் அலையினால் இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து வழங்கினார். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.

    இதேபோல் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

    இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று, சொந்த கட்சியினரே போர் கொடி தூக்கினர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மை எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.

    நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 211 எம்பிக்கள் ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 59 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். #TheresaMay #BrexitDeal #ConfidenceVote
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.
     
    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் தெரசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து இறக்குவதற்காகவும், ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர்.



    அதன்படி தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து தெரசா மேவுக்கு எதிராக நேற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீர்மானத்தின்மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 317 எம்பிக்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார்.

    பிரதமர் மீது பாராளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடி தெரிவித்தார். #TheresaMay #BrexitDeal  #ConfidenceVote
    தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார். #MLAsDisqualificationCase
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரித்த 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இன்று தீர்ப்பு அளித்தார். காலை 10.25 மணிக்கு நீதிபதி கோர்ட்டுக்கு வந்தார். சரியாக 10.30 மணிக்கு தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்கத் தொடங்கினார்.

    அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனிடம், ‘நான் தலைமை நீதிபதி தீர்ப்பு சரியா? நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு சரியா? என்ற வி‌ஷயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. நான் சுதந்திரமான முடிவுக்கு வந்து, இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளேன்’ என்று கூறினார்.

    பின்னர் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ‘18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு உள்நோக்கமோ, தவறோ இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.

    மேலும், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கும் போது என்ன ஆதாரமும், ஆவணங்களும், சூழ்நிலைகளும் நிலவியதோ, அதன் படி தான் சபாநாயகர் முடிவு எடுக்க முடியும். அதன்படி அவர் முடிவு எடுத்துள்ளார். அதில் தவறு இல்லை. அதை தொடர்ந்து பின்னர் நடைபெறும் நிகழ்வுகளை எல்லாம் அவர் பரிசீலிக்கத் தேவையில்லை.

    மேலும், முதல்அமைச்சருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதம் கொடுத்த போது, அதை பெற்றுக்கொண்ட தமிழக கவர்னர், இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.


    இதை தலைமை நீதிபதி அமர்வு முன்பு 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் கூறவில்லை. மேலும், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன்.

    ஏற்கனவே, 18 சட்டசபை தொகுதிகளையும் காலியாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. அதேபோல, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை விதித்து இருந்தது. இந்த தடைகளை எல்லாம் நீக்கி உத்தரவிடுகிறேன்.

    இவ்வாறு நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

    தடைகள் எல்லாம் நீக்கப்பட்டு விட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் 18 சட்டசபை தொகுதிகளை காலியாக அறிவித்து, அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #MLAsDisqualificationCase
    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    சென்னை:

    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 15 நாள் கால அவகாசம் என்பது ஒரு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் முதல்-அமைச்சர் மட்டும் இருந்து கொண்டு ஆட்சி அமைக்க முடியாது.

    நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. வெறும் 104 இடங்களை வைத்துள்ள பா.ஜனதாவால் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அதனால் எடியூரப்பா அரசாங்கம் கண்டிப்பாக கவிழும்.

    காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சேர்ந்து ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்படும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது முதல் பெரிய கட்சி பா.ஜனதா என்கிறார். அப்படி பார்த்தால் பீகாரில் ஆர்.ஜே.டி. லாலு கட்சிதான் பெரிய கட்சி. லாலுவும் நிதிஷ் குமாரும் சேர்ந்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைத்தனர். அதன்பிறகு அதை உடைத்து பி.ஜே.பியும் நிதிஷ்குமாரும் சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.

    அந்த மாநிலத்தில் அதிக இடங்களை பிடித்தது லாலு கட்சிதான் அவர்களுக்குதான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    அதே மாதிரிதான் கோவாவில் கங்கிரசுக்கு 28, பா.ஜனதாவுக்கு 22 இடம் தான் உள்ளது. இதேபோல் மிசோரம் மாநிலத்திலும் நிலைமை உள்ளது. இப்படி பல மாநிலங்களில் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நிலையில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநிலத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சிகள் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோவாவில் ஆரம்பித்து மற்ற மாநிலங்களிலும் கேட்க ஆரம்பித்துள்ளன.


    எனவே ஜனநாயக விரோதமாக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க கவர்னரை ஏஜெண்டாக பயன்படுத்தும் தவறான வழிமுறையை பிரதமர் மோடியும் மத்திய பா.ஜனதா அரசும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

    கர்நாடக சட்டசபையில் நடக்கும் தீர்ப்பின் மூலமாக கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும்போது ஒரு சரியான பாடத்தை பா.ஜனதா கற்றுக்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    ×