என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Consultative meetings"
- கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
- ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தயாராக தொடங்கி உள்ளது.
டெல்லியில் இது தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வாக்காளர் பட்டியல், ஓட்டுச் சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரச்சார கட்டுப்பாடுகள் என்று பல்வேறு வகைகளில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக அடுத்த மாதம் (ஜனவரி) முதல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் ஆணையர்கள் அனுப் பாண்டே, அருண் கோயல் ஆகிய மூவரும் மாநில வாரியாக சுற்றுப் பயணம் செய்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். 543 தொகுதிகளிலும் எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பார்கள்.
அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 7 கட்டமாக ஓட்டுப் பதிவு நடந்தது. இந்த தடவையும் அதேபோன்று ஓட்டுப்பதிவு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 10 லட்சத்து 18 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்க முதல் கட்டமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை கூடுதலாக தேவைப்படும். எனவே ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மின்னணு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில் இந்த தடவை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையர்கள் கருதுகிறார்கள்.
இது தவிர சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
- வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் கடலூர் மாநகர திருப்பாதிரிப்புலியூர் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேவல்குமார், மாநில மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மூத்த முன்னோடி களின் துணையோடு திருப்பாதிரிப்புலியூர் பகுதி சார்பில் 12,500 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பூத்கமிட்டி அமைத்தல், வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணி மேகலை தஷ்ணா,வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரஹாசன், பகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய லாளா் ஏ.ஆர்.சி.நாகராஜன் நன்றி கூறினாா்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
- ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராம ஊராட்சியின் வளர்ச்சி குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
இதில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, முது குளத்தூர், மண்டபம் ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-அனைத்து ஊராட்சி களிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த திட்டங்களை தீர்மானித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் பணிகள் நடை பெறும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும், பொது நிதியில் இருந்து எடுக்கப்படும் வேலைகளையும் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உரிய முறையில் குடிநீரில் குளோரிநேசன் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க வாட்டர் மீட்டர் பொருத்த வேண்டும்.
தெரு விளக்குகள் அலைபேசி மூலம் செயல்படுத்தும் முறை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன. 2023-24 கிராம வளர்ச்சி திட்டம் தயார்செய்யும் போது தண்ணீர் மேலாண்மை குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற மின் இணைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தேவையான மருத்துவ உதவிகளை பெற்று வழங்க வேண்டும். பொதுவாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது பணி முக்கியமான ஒன்றாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்