search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "controlled"

    இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். #mylswamyannadurai

    ஈரோடு:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

    அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

    தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

    விழாவில் அவரது மனைவி வசந்தி அண்ணாதுரை, சென்னை பேராசிரியர் சுரேஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.அப்துல் நன்றி கூறினார். #mylswamyannadurai

    காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:



    * காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

    * காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

    * அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

    * முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    ×