என் மலர்
நீங்கள் தேடியது "Cooking worker missing"
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி, மாரப்பா வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவரது மனைவி பவித்ரா.
பிரகாஷ் லஞ்ச்பாக்ஸ் என்ற பெயரில் ஹோம் டெலிவரி சர்வீஸ் வைத்து போன் செய்பவர்களுக்கு சாப்பாடு, டிபன் போன்றவற்றை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் வேலை பார்த்து வந்ததார்.
இந்நிலையில் கடந்த 5 -ந் தேதி மதியம் வாடிக்கையாளர் ஒருவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு பிரகாஷ் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பி வரவில்லை. திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து பிரகாஷ் மனைவி பவித்ரா சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
மாயமான அன்று பிரகாஷ் வெள்ளை சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரது இடது கால் பாதத்தில் பாம்பு கடித்த தடிப்பு உள்ளது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரகாசை தேடி வருகின்றனர்.