search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooperative Week"

    • தேனியில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மொத்தம் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்ககங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    தேனி:

    தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்களையும், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளையும் வழங்கினார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார் (பெரியகுளம்) மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 17,454 விவசாயிகளுக்கு ரூ.187.68 கோடி பயிர்க்கடன் வழங்க ப்பட்டுள்ளது. நடப்பா ண்டில் (2023-24) இதுவரை 10,675 விவசாயிகளுக்கு ரூ.126.51 கோடி பயிர்க்க டனாக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் கூட்டுறவுச் சங்க ங்கள மூலம் பயிர்க்கடன், நகை ஈட்டின்பேரில் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் விளை பொரு ட்கள் சந்தைப்படுத்துதல், கிட்டங்கி வசதி அளித்தல், தானிய ஈட்டின் பேரில் கடன், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக் குழுக்களுக்குக் கடன் வழங்கல், டாப்செட்கோ, டாம்கோ திட்டங்களின் கீழ் கடன் வழங்கல், மத்திய கால கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் ஊரகப் பொருளா தாரம் மேம்படவும், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்த ப்படுகின்றன என பேசி னார்.

    கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 995 நபர்களுக்கு ரூ.11.8 கோடி மதிப்பிலான பயிர்க்கடனும், 198 நபர்களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடனும், 941 நபர்களுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன்களும், 23 நபர்களுக்கு ரூ.55.45 லட்சம் மதிப்பிலான மத்திய கால கடனும், 28 நபர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சிறுவணிக்கடனும், 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கடனும்,

    7 மகளிருக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் தொழில் முனைவோர் கடனும், 2 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான விவசாயம் அற்ற கடனும், 3 நபர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சிறுகுறு தொழில் முனை வோர் கடனும், ஆதரவற்ற விதவைக் கடனாக ஒரு நபருக்கு ரூ.50,000மும், 12 நபர்களுக்கு சம்பளக் கடனாக ரூ.1.55 கோடியும் என மொத்தம் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்ககங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    • தேனி 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது.
    • அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    தேனி:

    தேனி என்.ஆர்.டி.மக்கள் மன்றத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது. விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ஆரோக்கியகுமார் வரவேற்புரையாற்றுகிறார். மதுரை மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா திட்ட விளக்கஉரையாற்றுகிறார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார், ராமகிரு ஷ்ணன், மகாராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீத்தா, அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜாங்கம் நன்றியுரை கூறுகிறார்.

    • ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாய கூடத்தில் 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    சேலம்:

    ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் கூட்டுறவு சங்கங்களில் கொடி ஏற்றுதல், உறுதிமொழி ஏற்பு, மரக்கன்றுகள் நடுதல், இலவச கால்நடை சிகிச்சை முகாம், விவசாயிகள் மகளிர் சுய உதவிகுழுக்கள் மற்றும் விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள் பங்கு பெறும் உறுப்பினர் சந்திப்பு முகாம், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி, கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள், பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை (19-ந் தேதி) மாலை சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாய கூடத்தில் 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, ஆவின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, சேகோசர்வ், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு துறைகளின் 1,033 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு இணைப்பதிவாளர் தலைமையின் கீழ் 362 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.25 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் வழங்க உள்ளார்.

    கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் மாநகராட்சி மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    • நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டசாலையில் விற்பனை மேளாவும் நடைபெற உள்ளது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாமும் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தொடங்கியது. இவ்விழா வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விழாவை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கலந்து கொண்டு கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

    இதனை தொ டர்ந்து இன்று (புதன்கிழமை) சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மரகன்றுகள் நடும் விழாவும், நாளை (வியாழக்கிழமை) பொங்கலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாமும் நடைபெற உள்ளது.

    மேலும் தொடர்ந்து 17-ந்தேதி அன்று கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் என்ற தலைப்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 18-ந்தேதி என். காஞ்சிபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாமும், 19-ந்தேதி திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டசாலையில் விற்பனை மேளாவும் நடைபெற உள்ளது.

    20-ந்தேதி (திங்கட்கிழமை) குடிமங்கலம் ஜெயராணி மகாலில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்கள் மற்றும் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர். விழாவில் பொதுமக்கள் மற்றும் கூட்டுறவாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    • திருப்பத்தூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.30.87 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினா்.

    கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:-

    இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளுவா் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 213 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதுதவிர வீட்டு வசதித்துறை, பால்வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டுவளா்ச்சித்துறை போன்ற துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கை மாவட்த்தில் 2022-23 ஆண்டில் 2022 முடிய அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்கடன் உள்பட மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 139 பேருக்கு ரூ.955.67 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளா்களுக்கும் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்கிடவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர வங்கி ஆகியவைகளில் பணியா ற்றும் அனைத்து நிலைகளை சார்ந்தோர்களுக்கும் தனி நிதியம் உருவாக்கி, அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சா் பெரியகருப்பன் பேசுகையில், கூட்டுறவே நாட்டுயா்வு என்ற அடிப்ப டையில், கூட்டுறவுத்துறை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் துறையாக திகழ்ந்து வருகிறது என்றார்.

    விழாவில் 3 ஆயிரத்து 586 பயனாளிகளுக்கு ரூ.30கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 953 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

    இதில் கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளா் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரவிச்சந்திரன், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தலைவா் சேங்கைமாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் தனபால், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், திருப்பத்தூர்பேரூராட்சி தலைவா் கோகிலாராணி, திருப்பத்தூர்ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ராமநாதபுரத்தில் கூட்டுறவு வாரவிழா நடந்தது.
    • இதில் 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். தொடர்ந்து 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசியதாவது:-

    விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் தான் இந்த அரசின் நோக்கம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்ட ங்களை செய்து வருகிறார்.

    மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் முன்கூட்டியே கொண்டு வரப்பட்டுள்ளன. வைகை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி, மின்சாரம், சாலை வசதி, குடிநீர்வசதி இவை அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திசைவீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மனோகரன், துணை பதிவாளர்கள் ஜெய்சங்கர், முருகன், புஷ்பலதா, சுப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் கூட்டுறவு வாரவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    முதல் நிகழ்ச்சியாக கூட்டுறவு கொடி ஏற்று விழா மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் சின்ன உடப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் நடந்தது.

    விழாவில் உறுதிமொழியை கூட்டுறவுத்துறையயைச் கூட்டுறவாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் இணைப்பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது. இதை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது.
    • இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய அளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதிவரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் வருகிற 14-ந் தேதி முதல் நவம்பர் 20-ந் தேதி வரை 69-வது கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட உள்ளது.

    கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பயிர்க்கடன் மேளா நடத்தப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.200 கோடி அளவுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளும், இதுவரை உறுப்பினராக சேராத விவசாயிகளும் உடனடியாக புதிய உறுப்பினராக சேர்ந்து பயிர் கடன் பெற்று பயனடையலாம். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வோளண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் பயிர்காப்பீடு கட்டணத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

    மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்டவாறு உர இருப்பு உள்ளது.

    யூரியா-840 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி.500 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ்-283 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ்-787 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது.

    எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

    கடன் உறுப்பினராக சேர தேவையான ஆவணங்கள்:-

    ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3

    கடன் பெற தேவையான ஆவணங்கள்:-

    1432 பசலி அடங்கல், 10(1) நகல் (பட்டா), ஆதார் அட்டை நகல், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கே.சி.சி. பாஸ்புக் நகல், ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×