search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cottton"

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 24 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்
    • சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.72 கோடி.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.72 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 802 விவசாயிகள், 8,123 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.இவற்றின் எடை 2,596 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 24 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.பருத்தி குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,819 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.72 கோடி.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • பருத்தி சீசன் தொடங்கியவுடன் ஒரு கேண்டியின் விலை ரூ.72 ஆயிரம் என குறைந்துள்ளது.
    • மத்திய அரசு விவசாயிகளுக்கு பருத்திக்கான ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசு பருத்திக்கு ஆதரவு விலையை நிா்ணயிக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு சைமா தலைவா் ஈஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    நாட்டில் கடந்த 6 மாதங்களாக பஞ்சு பதுக்கல் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையால் ஒரு கோண்டி (360 கிலோ) பஞ்சு ரூ.1.05 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பருத்தி சீசன் தொடங்கியவுடன் ஒரு கேண்டியின் விலை ரூ.72 ஆயிரம் என குறைந்துள்ளது.

    இந்நிலையில் வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஒரு கேண்டி ரூ.65 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையில் குறைய வாய்ப்பு உள்ளது.எனவே மத்திய அரசு விவசாயிகளுக்கு பருத்திக்கான ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

    இதில் முதல் தர பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரம், இரண்டாம் தர பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் என்று நிா்ணயிக்க வேண்டும். இந்த விலையை ஜின்னா்ஸ் மற்றும் வியாபாரிகள் கொடுக்க மறுத்தால் இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) தலையிட்டு கொள்முதல் செய்து அரைத்து நியாயமான விலையில் பஞ்சை விற்பனை செய்ய வேண்டும்.மேலும் உள்நாட்டுத் தேவைக்குப்போக மீதமுள்ள பஞ்சை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும்.அதிலும் மாதம் 5 லட்சம் பேல் என்ற வகையில் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.இதன் மூலமாக பெரு வியாபாரிகள் பருத்தியைக் கொள்முதல் செய்து பதுக்கிவைத்து விலை ஏற்றம் செய்வதைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×