search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court summon"

    இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் செப்டம்பர் 20-ந்தேதி ஆஜராகுமாறு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #MohammedShami
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் புகார் கூறி இருந்தார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முகமது ‌ஷமி மீது அவர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவாகி இருந்தது.

    தனக்கும், தனது மகளுக்கும் குடும்ப செலவாக முகமது ‌ஷமி மாதம் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும் ஏப்ரல் மாதம் ஹசின் ஜகான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதை தொடர்ந்து முகமது ‌ஷமி ரூ.1 லட்சத்துக்கு செக் கொடுத்து இருந்தார்.

    ஆனால் இந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது இதை தொடர்ந்து அவர் மீது செக் மோசடி வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் முகமது ‌ஷமிக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

    செப்டம்பர் 20-ந்தேதி முகமது ‌ஷமி ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை ஹசின் ஜகானின் வக்கீல் ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.

    27 வயதான முகமது‌ ஷமி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் உடல் தகுதி பெறாததால் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். ஆனால் தற்போது இங்கிலாந்து டெஸ்டில் இடம் பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. #MohammedShami #HasinJahan
    ×