என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Covaxin"
- கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது.
- பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.
உலகளவில் பெரும் பாதிப்புகளையும், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர்.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடலில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
அந்த வரிசையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக என தகவல் வெளியானது.
கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி இருந்தது. இதில் பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், கோவாக்ஸ் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும், ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும், திரும்பப் பெறப்படாவிட்டால், சட்டரீதியாக மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வெளியான அறிக்கை முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்.
- ஓராண்டுக்கு பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது.
உலகளவில் பெரும் பாதிப்புகளையும், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொடூர நோயாக கொரோனா வைரஸ் பாதிப்பு விளங்கியது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரம் காட்டினர்.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல்நிலையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
அந்த வரிசையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தடுப்பூசி போட்ட ஓராண்டுக்கு பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது.
கோவாக்சின் போட்டவர்களில் 30 சவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் போட்டவர்களில் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதில் பருவ வயது கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி இருப்போருக்கு இதன் பாதிப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. ஆய்வு முடிவுகளின் படி கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று மற்றும் சுவாசக்குழாயில் நோய்த்தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதே போன்று பதின்ம வயது கொண்டவர்களில் 10.5 சதவீதம் பேருக்கு தோல் சார்ந்த கோளாறுகள், 10.2 சதவீதம் இதர பாதிப்புகள், 4.7 சதவீதம் பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. பெரியவர்களில் 8.9 சதவீதம் பேருக்கு பொதுவான பக்க விளைவுகள், 5.8 சதவீதம் பேருக்கு தசைக்கூட்டு கோளாறுகள், 5.5 சதவீதம் பேருக்கு நரம்பு மண்ட கோளாறுகள் ஏற்படுவது உறுதியாகி உள்ளது.
- பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
- பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித குறைபாடும் கொண்டிருக்கவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசியால் மிகவும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படுகிறது என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜென்கா நிறுவனம் கூறிய நிலையில், கோவாக்சின் (COVAXIN) மிகவும் பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "பாதுகாப்பு எனும் ஒற்றை இலக்கை குறிக்கோளாக கொண்டு தான் கோவாக்சின் உருவாக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செயல்திறன் சோதனை செய்யப்பட்ட ஒரே கோவிட் 19 தடுப்பூசி கோவாக்சின் மட்டும் தான்."
"உரிமம் பெறும் வழிமுறையின் கீழ் கோவாக்சின் தடுப்பூசி 27 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை முறையில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது."
"கோவாக்சின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. கோவாக்சின் ஆயுள் காலம் தொடர்பாக தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன."
"மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆய்வு முடிவுகள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் அடிப்படையில் கோவாக்சின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித குறைபாடும் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது."
"அனுபவம் மிக்க ஆய்வாளர்கள் அடங்கிய பாரத் பயோடெக் குழுவினர் கோவிட் தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைவு என்பதை நன்கு அறிந்துள்ளனர். எனினும், இவை பயனாளிகள் உடலில் அவர்களது ஆயுள் முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக எங்களது அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பு எனும் ஒற்றை நோக்கத்தை குறிக்கோளாக கொண்டே உருவாக்கப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளது.
- பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.
- கோவேக்சின் பூஸ்டர் டோஸ் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது.
புதுடெல்லி :
டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ்களுக்கு எதிரான செயல்திறனை கோவேக்சின் பூஸ்டர் டோஸ் அதிகரிக்கிறது என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி, அது தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்), பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி பற்றிய ஒரு ஆராய்ச்சியை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெல்டா-ஒமைக்ரானுக்கு எதிராக... இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது டோஸ் செலுத்தியதன் பாதுகாப்பு செயல்திறன் சிரியாவின் வெள்ளெலி மாதிரியைக் கொண்டு (மனிதன் தொடர்பான நோய்களை ஆராய உதவும் விலங்கு மாதிரி) ஆராயப்பட்டது.
இதில், கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் மற்றும் 3-வது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செயல் திறனை ஆராய்ந்ததில், இது டெல்டா வைரசுக்கு எதிரான செயல்திறனை மேம்படுத்துகிறது. ஒமைக்ரான் வகைகளான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கிறது என தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு பதிலளிப்பு, மருத்துவ பலன் கண்காணிப்புகள், வைரஸ் அளவு குறைதல், நுரையீரல் நோயின் தீவிரம் ஆகியவை ஆராயப்பட்டன.
டெல்டா வைரஸ் தொற்று ஆராய்ச்சியில், 2-வது மற்றும் 3-வது டோஸ்களுக்கு இடையேயான பாதுகாப்பு பதிலளிப்பை ஒப்பிட்டு பார்த்ததில், பாதுகாப்பில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் உணரப்பட்டது. நுரையீரல் நோய் தீவிரம், 3 டோஸ் தடுப்பூசிக்கு பின் மேலும் குறைந்தது. டெல்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனை குறிக்கும் 2-வது மற்றும் 3-வது டோஸ் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி ஆராய்ந்ததில், வைரஸ் சுமை குறைந்தது.
ஒமைக்ரான் வைரஸ்களான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு பதிலளிப்பை ஆய்வு செய்ததில், 3-வது டோஸ் செலுத்திய பிறகு வைரஸ் சுமை குறைந்தது தெரியவந்தது. தற்போதைய ஆராய்ச்சியின் முடிவு, கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது. பாதுகாப்பு நோய் எதிர்ப்பு பதிலளிப்பை விரிவுபடுத்துகிறது என தெரிய வந்துள்ளது.
இவ்வாறு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
- கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்சின்.
- கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
புதுடெல்லி:
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மேற்படி தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியானது. அரசியல் அழுத்தம் காரணமாக தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டதாகவும், இதனால் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தன.
மேலும், தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது இந்திய மருத்துவம் மற்றும் விஞ்ஞான துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதில் எவ்வித அரசியல் நெருக்கடியும் இல்லை. அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகள் ஆராயப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது. மக்களை குழப்பும் வகையில் பொய் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளது.
- கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்தி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
- இந்த பரிசோதனை அறிக்கையை 'லேன்செட் தொற்று நோய்கள்' பத்திரிகை ஏற்று வெளியிட்டுள்ளது.
ஐதராபாத் :
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் முடிவில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது, நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் அதிக நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனை அறிக்கையை 'லேன்செட் தொற்று நோய்கள்' பத்திரிகை ஏற்று வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தார் கோவேக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வரையிலானவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையில் செலுத்தி பரிசோதித்துள்ளனர்.
இதன் தரவுகள் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் 6 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த அவசர கால பயன்பாட்டு அனுமதி தரப்பட்டுள்ளது.
முற்றிலும் இந்திய தயாரிப்பான ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்தது.
இந்தநிலையில், இங்கிலாந்து தனது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்சினை சேர்த்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள். அவர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யவோ, இங்கிலாந்தில் தங்கும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்