என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cow Hug Day"
- நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டும், வீடியோக்களை பதிவிட்டும் கடுமையாக கலாய்த்தனர்.
- இந்தியாவில் காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது
புதுடெல்லி:
உலகெங்கும் காதலர் தினமான கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, இந்தியாவில் பசு அணைப்பு விழாவாக கொண்டாடவேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை கடும் விமர்சனங்களை பெற்றது. இணையதளத்தில் பலரும் மீம்ஸ் போட்டும், வீடியோக்களை பதிவிட்டும், கிண்டலான கருத்துக்களை வெளியிட்டும் கலாய்த்தனர்.
இந்நிலையில், பசு அணைப்பு தின அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது. கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் வந்ததையடுத்து, பசு அணைப்பு தினம் தொடர்பான அறிக்கையை விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாட, இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா கூறியுள்ளார்.
இந்தியாவில் காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகள், ஒவ்வொரு ஆண்டும் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொள்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், குறிப்பாக சில கிராமப்புறங்களில், காதலர் தினத்தன்று, காதல் ஜோடிகள் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. காதலர் தின கொண்டாட்டம் மோசமான மேற்கத்திய இறக்குமதி என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
- காதலர் தினத்தன்று சுற்றுலா தலங்கள், பூங்காக்களில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சுற்றி திரிவதையும் காணலாம்.
- பசுக்களை அணைப்பதன் மூலம் உணர்ச்சி பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலும் இப்போது காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. பெரு நகரங்களில் இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுபோல காதலர் தினத்தன்று சுற்றுலா தலங்கள், பூங்காக்களில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சுற்றி திரிவதையும் காணலாம். மேலும் அன்றைய தினத்தில் காதல் ஜோடிகள் பரிசு பொருட்கள் பரிமாறி கொள்வது, காதலை வெளிப்படுத்துவது என சுவாரசியமான சம்பவங்களும் நடைபெறும்.
இப்படி களை கட்டும் காதலர் தினத்திற்கு இந்தியாவில் ஆதரவு தெரிவிப்போரும், எதிர்ப்பு காட்டுவோரும் உள்ளனர். காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம் என்றும் அதனை புறந்தள்ள வேண்டும் என்று ஒரு சாராரும்,
இல்லவே இல்லை, காவிய காலம் தொட்டு காதல் இருந்து வருகிறது. அதனை வெளிகாட்டும் நாள் தான் காதலர் தினமென்று இன்னொரு சாராரும் கூறி வருகிறார்கள். இதனால் இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை விரட்டும் சம்பவங்களும், கழுதைக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவது உண்டு. இதுபோல சில காதல் ஜோடிகள் பொதுவெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சாலையில் நடந்து செல்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தவும் செய்வார்கள்.
இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கு பதில் பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவோம் என்று மத்திய கால்நடை பராமரிப்பு துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பசு பால் தருவதோடு மட்டுமல்ல அன்னையாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வருகிற 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம்.
பசுக்களை அணைப்பதன் மூலம் உணர்ச்சி பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட்டு நமது பாரம்பரியத்தை பாதுகாப்போம்.
வேதங்களில் பசுக்களின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த மரபுகளை தொடர்ந்து செய்ய 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்