search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CR Patil"

    • மேகதாது திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.
    • வெண்ணாறு பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தும் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல், இணை மந்திரிகள் சோமண்ணா, ராஜ்பூஷன் சவுத்ரி ஆகியோரை சந்தித்து தமிழக நதிநீர் பிரச்சினைகள், நிதிஉதவி பெறுதல் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

    அவருடன் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கேஎஸ்.விஜயன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    மத்திய மந்திரிகளிடம் அளிக்கப்பட்ட மனுவில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மாதாந்திர அட்டவணைப்படி பிலிகுண்டுலுவில் தண்ணீர் வழங்க வேண்டும்.

    மேகதாது திட்டம் தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது. காவிரிப்படுகையில் நீர்ப்பற்றாக்குறை காலங்களில் விகிதாச்சாரப்படி நீர் பங்கீடு செய்ய அறிவியல் பூர்வ விதிமுறையை நிர்ணயிக்க ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்.

    வெண்ணாறு பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தும் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்.

    கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி இணைப்புக் கால்வாய் திட்டத்தை உடனே செயல்படுத்த காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்காக ரூ,6,941 கோடி செலவு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து, இதுவரை ரூ,245.21 கோடி செலவு செய்துள்ளது. இதனை விரைவாக செயல்படுத்த மத்திய அரசின் கொள்கை அளவு ஒப்புதலையும், நிதியையும் வழங்க வேண்டும்.

    முல்லைப் பெரியாற்றில் சிற்றணை மற்றும் மண் அணைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளின்படி வலுப்படுத்தவும், இடையூறாக உள்ள 15 மரங்களை அகற்றவும், கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லவும் ஒத்துழைக்க கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

    பெண்ணையாறு பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

    குளங்கள் சீரமைப்பு திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கு நிதியில் உள்ள நிலுவைத்தொகை ரூ,212 கோடியை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "மத்திய மந்திரிகள் இந்தியில் பதில் சொன்னார்கள். எங்களுக்கு புரியவில்லை. இருந்தாலும் நமது செயலாளர் விஷயங்களை எடுத்துரைத்தார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தபிறகு அதன்படி ஒருபோதும் தண்ணீர் வழங்கியது இல்லை. இதை எடுத்துச் சொன்னேன். கர்நாடகத்தில் சித்தராமையாவிடம் சொல்லச் சொன்னார்.

    ஆனால் தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்று நான் சொன்னேன். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த அணையை பலப்படுத்த வேண்டும். அந்த பணிகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. மேகதாது அணை விஷயத்தில் பிரம்மாவே அங்கு தோன்றி கட்டச் சொன்னாலும் எதிர்த்தே தீருவோம். அணை விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. எனவே பேச்சுவார்த்தைக்கு இடமில்லை." என்று கூறினார்.

    குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல், பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

    இந்த தேர்தலில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. 

    குஜராத் மாநிலத்தின் நவ்சாரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.ஆர். பாட்டீல், 9,69,430 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ்பாய் பீம்பாய் பட்டேல் 2,81,663 வாக்குகள் பெற்றார்.



    இதன்மூலம் சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதேபோல், மேலும் 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

    அரியானாவின் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் பாட்டியா 6,54,269 வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானின் பில்வாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுபாஷ் சந்திர பகேரியா 6,10,920 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×