search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Croatia vs England"

    உலக கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதியில் பிரான்ஸ் - பெல்ஜியம், இங்கிலாந்து - குரோஷியா ஆகிய நாடுகள் 10 மற்றும் 11-ந்தேதிகளில் மோதுகின்றன. #WorldCup2018
    செயின்ட் பீட்டர்ஸ் பர்க்:

    உலககோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    கடந்த 28-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ், டென்மார்க், குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, சுவீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியன் ஜெர்மனி, எகிப்து, சவுதி அரேபியா, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் தொடக்க சுற்றிலேயே வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    கால்இறுதி ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன்களாக உருகுவே, பிரேசில் மற்றும் சுவீடன், போட்டியை நடத்தும் ரஷியா ஆகிய அணிகள் கால்இறுதியில் வெளியேற்றப்பட்டன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 10-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

    பிரான்ஸ் அணி 6-வது முறையாகவும், பெல்ஜியம் 2-வது முறையாகவும் அரை இறுதியில் மோதுகின்றன.

    11-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் குரோஷியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    குரோஷியா 2-வது முறையாகவும், 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து 3-வது முறையாகவும் அரை இறுதியில் ஆடுகின்றன.

    3-வது இடத்துக்கான ஆட்டம் 14-ந்தேதியும், இறுதிப்போட்டி 15-ந்தேதியும் நடைபெறுகிறது. #WorldCup2018
    ×