என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crorepatis"

    • 10ம் வகுப்பில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. அதன்பிறகு படிப்பில் நாட்டமில்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டார்.
    • ஒரு மாதத்தில் சுமார் 8,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ.1.8 கோடி சம்பாதித்துள்ளார்.

    விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டமடைந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வருட தக்காளி விலையேற்றம் ஒரு சில விவசாயிகளை கோடீசுவரராக்கியுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கவுடிபள்ளி கிராமத்தில் வசிப்பவர் மகிபால் ரெட்டி, விவசாயி. சிறு வயதில் அவரது மனம் படிப்பில் ஈடுபடவில்லை. அவரால் 10ம் வகுப்பில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. அதன்பிறகு படிப்பில் நாட்டமில்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டார்.

    தக்காளியுடன் ரெட்டி நெல் சாகுபடியும் செய்தார். ஆனால் நெல் சாகுபடியில் லாபம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தக்காளி சாகுபடியை தொடங்கினார்.

    இவர் 8 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டார். விளைச்சல் அறுவடைக்கு தயாரானதும் ஜூன் 15ல் சந்தைக்கு கொண்டு வந்தார். அங்கு தக்காளியை விற்று கோடீசுவரரானார்.

    ஒரு மாதத்தில் சுமார் 8,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ.1.8 கோடி சம்பாதித்துள்ளார். சீசன் முடிவதற்குள் சுமார் ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டப்போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் சந்தையில் தக்காளி வரத்து போதுமான அளவு இல்லை. அதனால் ஐதராபாத்திற்கு தக்காளியை அனுப்ப ஆரம்பித்தார். அங்கு தக்காளியை கிலோ ரூ.100க்கு விற்று 15 நாட்களில் சுமார் ரூ.1.25 கோடி சம்பாதித்துள்ளார்.

    ரெட்டி ஒரு ஏக்கர் பயிரில் ரூ.2 லட்சம் செலவழித்து, தனது பயிரை தரமானதாக மாற்றினார். மொத்த சாகுபடிக்கு ரூ.16 லட்சம் செலவானதாக தெரிவித்தார். 40% பயிர் இன்னும் வயலில் எஞ்சியுள்ளது என்றும் அதுவும் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று ரெட்டி கூறினார்.

    பட்டதாரிகள் பலர் வேலை தேடி அலைவது குறித்து செய்திகள் வெளிவரும் நிலையில், 10ம் வகுப்பு கூட தேர்ச்சியடையாத மகிபால் ரெட்டி, விவசாயம் செய்து கோடீசுவரராகி இருப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 எம்எல்ஏ-க்களில் 56 பேர் ‘கோடீஸ்வரர்கள்’.
    • இந்த ஆண்டு 71 கோடீஸ்வர எம்எல்ஏ-க்களில் 28 பேர் ஜேஎம்எம், 20 பாஜக, 14 காங்கிரஸ்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜேஎம்எம் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 89 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களை விட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    ஜார்கண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களில் 89 சதவீதம் பேர் 'கோடீஸ்வரர்கள்' என்றும், அவர்களில் காங்கிரஸின் ராமேஷ்வர் ஓரான் ரூ.42.20 கோடி மதிப்பிலான சொத்துக்களுடையவர் என்றும் தெரிய வந்துள்ளது.

    ஜார்கண்ட் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெற்றி பெற்ற 81 வேட்பாளர்களில் 80 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, 2024-ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.எல்.ஏக்கள் 'கோடீஸ்வரர்கள்' என்பதை கண்டறிந்துள்ளது. இது 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட 20% அதிகம்.

    ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 எம்எல்ஏ-க்களில் 56 பேர் 'கோடீஸ்வரர்கள்' என்றும், 2014-ல் 41 பேர் என்றும் அறிக்கை கூறுகிறது.

    இந்த ஆண்டு 71 கோடீஸ்வர எம்எல்ஏ-க்களில் 28 பேர் ஜேஎம்எம், 20 பாஜக, 14 காங்கிரஸ், 4 ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜேடி(யு) மற்றும் ஏஜேஎஸ்யுவைச் சேர்ந்த தலா ஒருவர் எம்.எல்.ஏ.-க்கள் ஆவார்கள்.

    ஜேஎம்எம் 34 சட்டமன்ற இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 4 மற்றும் சிபிஐ (எம்எல்) லிபரேஷன் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மறுபுறம், பாஜக 21 சட்டமன்ற தொகுதிகளையும், அதன் கூட்டணியான எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜேடி(யு) மற்றும் ஏஜேஎஸ்யு கட்சி தலா ஒரு இடத்தை பெற்றன.

    வெற்றி பெற்ற வேட்பாளர்களில் காங்கிரஸ் லோஹர்டகா எம்எல்ஏ ராமேஷ்வர் ஓரான் மொத்த சொத்து மதிப்பு ரூ.42.20 கோடியுடன் அதிக பணக்காரர் ஆவார்.

    பாங்கி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் குஷ்வாஹா சஷி பூஷன் மேத்தா, மொத்தம் ரூ.32.15 கோடி சொத்துக்களுடன் வெற்றி பெற்ற 2-வது பணக்கார வேட்பாளராகவும், கோடா தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்ஜேடியின் சஞ்சய் பிரசாத் யாதவ், ரூ.29.59 கோடி மொத்த சொத்துக்களுடன் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வியாழக்கிழமை பதவியேற்ற மந்திரிகளில் 51 பேர் கோடீஸ்வரர்கள். 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 47 மந்திரிகள் பட்டதாரிகள். ஒரு மந்திரி டிப்ளமோ படித்துள்ளார். 8 மந்திரிகள் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 

    16வது மக்களவையை ஒப்பிடுகையில், இந்த மக்களவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் குற்றவழக்குகள் கொண்ட மந்திரிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகம் ஆகும். தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. 

    சராசரியாக ஒவ்வொரு மந்திரிக்கும் ரூ.14.72 கோடி சொத்து உள்ளது. உள்துறை மந்திரி அமித் ஷா, ரெயில்வே  மந்திரி பியூஷ் கோயல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைலாஷ் சவுத்ரி, ராமேஸ்வர் தேலி உள்ளிட்ட 5 மந்திரிகளுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து உள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மந்திரி பிரதாப் சந்திர சாரங்கியிடம் வெறும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்பித்து, வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. #Crorepatis #IncomeTaxDepartment
    புதுடெல்லி:

    மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி செலுத்தியவர்கள் (தனியார் நிறுவனங்கள் உள்பட) எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உயர்வு விகிதாச்சாரம் நிதியாண்டு 2014-15-ம் 88 ஆயிரத்து 649 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்ப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை நிதியாண்டு 2017-18-ல் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

    இதே காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்ததாக வரி கட்டியவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 416-ல் இருந்து 81 ஆயிரத்து 344 ஆக (68 சதவீதம்) உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அரசின் சட்டரீதியான, தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த உயர்வுக்கு காரணம் என மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் சுஷில் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் கடந்த 4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியில் இருந்து 6.85 கோடியாக (80 சதவீதம்) உயர்ந்துள்ளது.  #Crorepatis #IncomeTaxDepartment
    ×