என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSAP"

    • டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg].
    • இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம்.

     டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல பியர் மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg]. இந்நிறுவனத்தின் பார்ட்நர்ஷிப்பில் இந்தியாவில் CSAPL நிறுவனமும் நேபாள நாட்டில் கூர்க்கா ப்ரியூயரி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த இரண்டு பார்ட்நர்ஷிப் நிறுவனங்களையும் 744 மில்லியன் டாலர்களுக்கு [ரூ.6,234 கோடிக்கு] விலைக்கு வாங்க கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் முன்வந்துள்ளது.

     

    இதன்படி CSAPL நிறுவனத்தில் ஏற்கனவே அதிக பங்குகளை வைத்துள்ள கார்ல்ஸ்பெர்க், அதில் மீதமுள்ள 33.33% பங்குகளையும் தற்போது வாங்க உள்ளது. மேலும் நேபாள நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கார்ல்ஸ்பெர்க் வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி விரைவில் இந்த இரண்டு நிறுவனமும் கார்ல்ஸ்பெர்க் நிர்வாகத்தின் கீழ் செல்கிறது.

     

    ஆசியாவில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் வலுவாகக் காலூன்ற இது ஒரு வரலாற்று நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம். 

    ×