என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CSKvsRCB"
- முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
- கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் 22ம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்தது.
- முதலில் ஆடிய சென்னை அணி 226 ரன்கள் குவித்தது.
- தொடக்க வீரர் டேவன் கான்வே, ஷிவம் துபே ஆகியோர் அரை சதமடித்தனர்.
பெங்களூரு:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் டேவன் கான்வே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 52 ரன்கள் விளாசினார். ரகானே 37 ரன்களில் அவுட்டானார்.
பெங்களூரு சார்பில் முகமது சிராஜ், வாய்னே பார்னெல், விஜயகுமார் வைஷாக், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
அந்த அணியின் கிளென் மேக்ஸ்வெல், டூ பிளசிஸ் அதிரடியில் மிரட்டினர். மேக்ஸ்வெல் 36 பந்தில் 76 ரன்னும், டூ பிளசிஸ் 33 பந்தில் 62 ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக்28 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட் வீழ்த்தினார்.
+2
- துவக்க வீரர் தேவன் கான்வே அதிரடியாக ஆடி 83 ரன்கள் குவித்தார்.
- 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
பெங்களூரு:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சென்னை அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் மற்றொரு துவக்க வீரர் தேவன் கான்வே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். விரைவில் அரை சதம் கடந்த அவர் 83 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். முன்னதாக ரகானே 37 ரன்களில் அவுட் ஆனார். இதேபோல் ஷிவம் துபே, தன் பங்கிற்கு பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 52 ரன்கள் விளாசினார்.
அம்பதி ராயுடு 14 ரன், ஜடேஜா 10 ரன், மொயீன் அலி 19 ரன் (அவுட் இல்லை) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ், வாய்னே பார்னெல், விஜயகுமார் வைஷாக், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்