search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvSRH"

    • பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும்.
    • 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் 2024 சீசனில் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படுகிறது. 200 ரன்கள் எளிதாக அடிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் ஆறுமுறை 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 262 இலங்கை எட்டிப்பிடித்தது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 212 ரன்கள் குவித்தது. பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 134 ரன்னில் சுருண்டது.

    இந்த போட்டிக்குப்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மினஸ் கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். தற்போது இந்த ஐபிஎல் தொடரில் முற்றிலும் புதிய லெவலுக்கு சென்றுள்ளது. இந்த லெவலை அமைக்கும்போது, நாம் உண்மையிலேயே ஆக்ரோஷமாக விளையாடும் சில வீரர்களை பெற்றிருந்தால், அதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும், தொடரில் வெற்றி பெற முடியும்.

    வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகப்பெரிய அளவில் பந்து வீச்சு ஆப்சனை பெறவில்லை. பந்து ஸ்விங் ஆகும் வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. ஆடுகளமும் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருப்பதில்லை.

    இதனால் பெரும்பாலான நேரங்களில் முயற்சி செய்வதும், குறைந்த ரன்கள் கொடுக்க முயற்சிப்பதும் விக்கெட் எடுப்பதற்கு சிறந்த வழி. பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும். அதேவேளையில் 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்.

    நாங்கள் சேஸிங் செய்யும் வகையில் நன்றாக தயாராகி இருந்தோம். ஆனால், இதுவரை எங்களுக்கு சிறந்த வகையில் அமையவில்லை. அந்த விசயத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிஎஸ்கே 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சென்னை:

    சென்னையில் இன்று இரவு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார்.

    சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், ஆகாஷ் சிங், தீக்ஷனா, பதீரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 35 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரகானே 9 ரன்னிலும், ராயுடு 9 ரன்னிலும் வெளியேறினர்.

    மறுபுறம் கான்வே அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கான்வே 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் சென்னை அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 134 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார்.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் 18 ரன்னில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 34 ரன்னிலும், ராகுல் திரிபாதி 21 ரன்னிலும், மார்கிரம் 12 ரன்னிலும், கிளாசன் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது.

    சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

    • இன்றைய போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

    டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் ஐதராபாத் அணி முதலில் பேட் செய்கிறது.

    • சிஎஸ்கே, ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் வரும் 21-ம் தேதி நடக்கிறது.
    • சென்னையில் இந்தப் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 21-ம் தேதி நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

    ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது

    அவர்தான் வெற்றி பெறுவதற்கான திட்டம் எல்லாம் வைத்திருப்பார். நான் அதை செயல்படுத்துவேன் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.

    இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.

    இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-


    இறுதிப்போட்டியில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். திட்டம் வைத்து இருப்பது எல்லாம் பயிற்சியாளர் பிளமிங் தான். நான் அதை செயல்படுத்துவேன். இதற்காக பிளமிங்குக்கு பெரிய பணத்துக்கான செக் கிடைக்கிறது. ஐதராபாத்துக்கு எதிரான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைக்காதது ஏன்? என்று கேட்கிறார்கள்.


    எனது வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. அது போலத்தான் அணியில் 6 மற்றும் 7 பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது யார் பேட்டிங் செய்கிறார் அந்த நேரத்தில் என்ன தேவை என்பது போன்ற சூழ்நிலையை பொறுத்து தான் பந்துவீச்சாளர்களை அழைக்க முடியும். அப்படித்தான் செயல்படுகிறேன். அந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

    ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு டோனி கூறினார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு காரணமாக இருந்த பின்வரிசை வீரர்களை கேப்டன் டோனி பாராட்டி உள்ளார். #IPL2018 #CSKvSRH
    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதியது. முதலில் விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்னே எடுக்க முடிந்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 42 பந்தில் 67 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 13 பந்தில் 22 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு டு பிளிஸ்சிஸ் முக்கிய பங்கு வகித்தார். சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. இதனால் தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கிய டு பிளிஸ்சிஸ் இறுதி வரை களத்தில் நின்று சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

    கடைசி கட்டத்தில் அவருக்கு தீபக் சாஹரும், ‌ஷர்துல் தாக்கூரும் உதவியாக இருந்தனர். சாகர் 6 பந்தில் 10 ரன்னும் (1 சிக்சர்), ‌ஷர்துல் தாக்கூர் 5 பந்தில் 15 ரன்னும் (3 பவுணடரி) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-


    சி.எஸ்.கே. அணியின் பின்வரிசை வீரர்களுக்கே பாராட்டு எல்லாம் சேரும். நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் டு பிளிஸ்சுக்கு ஜோடியாக நின்று வெற்றியை தேடி தந்தனர். இந்தப்போட்டிக்கான அனுபவத்தில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்வது முக்கியமானது.

    இந்தப்போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். வீரர்களின் அறை இதற்கு முக்கிய பங்கு வகித்தது. அணியின் நிர்வாகத்துக்கு பாராட்டு எல்லாம் சேரும். வீரர்களின் அறை சுமூகமாக இல்லாவிட்டால் ஆடுவது கடினமாகும். இறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் மகிழ்ச்சியானது. இந்த வெற்றி முக்கியமானது.

    இவ்வாறு டோனி கூறினார்.

    தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் சில ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். சென்னை அணியின் பின்வரிசை வீரர்கள் எங்கள் வெற்றியை பறித்துவிட்டனர்” என்றார்.

    ஐதராபாத் அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் கொல்கத்தா அல்லது ராஜஸ்தானை சந்திக்கிறது. #IPL2018 #CSKvSRH
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான குவாலிபையர் 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #SRHvCSK
    ஐபிஎல் 2018 தொடரின் ‘குவாலிபையர் 1’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் 7.30 மணிக்கு சுண்டப்பட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் சுண்ட டோனி ‘ஹெட்’ என அழைத்தார். டோனி அழைத்தபடி ‘ஹெட்’ விழ, டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    ஐ.பி.எல். தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 62 பந்தில் சதம் அடித்த அம்பதி ராயுடுவை, வெற்றிக்கு பிறகு கேப்டன் டோனி பாராட்டி உள்ளார். #SRHvCSK #Dhoni #AmbatiRayudu
    புனே:

    ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி சென்னை அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் அம்பதி ராயுடு அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 62 பந்தில் 100 ரன்குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். ஐ.பி.எல் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். இதன் மூலம் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தான் விளையாடிய அனைத்து ஐ.பி.எல். போட்டிகளிலும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற முத்திரையை சென்னை சூப்பர் கிங்ஸ் பதித்தது.

    2 ஆண்டு தடைக்கு பிறகு விளையாடும் அந்த அணி இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தியது. ஏற்கனவே அந்த அணியை அதன் சொந்த மண்ணில் 4 ரன்னில் வென்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-


    இந்த ஆடுகளத்தில் 2-வது பகுதியில் பந்து அதிகமாக ‘சுவிங்’ ஆகும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்காதது அதிர்ச்சியாக இருந்தது. வாட்சனும், அம்பதி ராயுடுவும் சிறப்பாக ஆடினார்கள். வாய்ப்பு கிடைத்த போது பவுண்டரிகளாக விளாசினார்கள். இல்லையென்றால் ஐதராபாத் அணி நிர்ணயித்த 180 ரன்னை சேஸ் செய்வது கடினமாக இருக்கும்.

    ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பே அம்பதி ராயுடுக்கு அணியில் இடத்தை ஒதுக்கி வைத்து விட்டேன். ஏனென்றால் அவர் திறமை மீது உயர்ந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டிலும் அவர் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

    அவரை பார்த்தால் அதிரடி பேட்ஸ்மேன் மாதிரி தெரியாது. ஆனால் எப்போதுமே சிறந்த ஷாட்களை ஆடக் கூடியவர். அதனால் கேதர் ஜாதவ் உடல் தகுதியுடன் இருந்தால் ராயுடுவை தொடக்க வீரராக களம் இறக்க முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். ஜாதவ் 4 அல்லது 5-வது வீரராக களமிறங்க முடிவு செய்தோம்.

    எதிர்பாராதவிதமாக நாங்கள் ஒரு போட்டியில் மட்டுமே சென்னையில் ஆடினோம். அடுத்து புனேக்கு வந்து விட்டோம். இங்கும் ரசிகர்கள் ஆதரவு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை அணி 13-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 18-ந்தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அணி 17-ந்தேதி பெங்களூரை எதிர்கொள்கிறது. #SRHvCSK #CSKvSRH #Dhoni #AmbatiRayudu
    வலுவான பந்து வீச்சை யுனிட்டை கொண்ட ஐதராபாத்திற்கு எதிராக 61 பந்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் அம்பதி ராயுடு. #IPL2018 #CSKvSRH
    ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் இன்று முதல் ஆட்டமாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 179 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷித் கான், ஷாகிப் அல் ஹசன் கொண்ட வலுவான பந்து வீச்சு யுனிட்டை கொண்டு இந்த தொடரில் பெரும்பாலான அணிகளை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தி வெற்றிவாகை சூடியுள்ளது.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இலக்கை எட்ட கஷ்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர்களாக வாட்சன் - அம்பதி ராயுடு ஜோடி பவுலிங் கோட்டையை தகர்த்தெறிந்தனர்.

    பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 53 ரன்கள் குவித்தனர். வாட்சன் 31 பந்தில் அரைசதம் அடித்தார். 11-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 31 பந்தில் அரைசதம் அடித்தார் அம்பதி ராயுடு. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 10.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.



    இந்த தொடரில் ஐதராபாத் அணிக்கெதிராக எடுக்கப்பட்ட 2-வது 100 பார்ட்னர்ஷிப் இதுவாகும். இந்த ஜோடி 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. வாட்சன் 35 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் அவுட்டானதும் அம்பதி ராயுடு வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 19-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 61 பந்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். அவரது சதத்தில் தலா 7 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.

    வலுவான பவுலிங் யுனிட்டை தகர்த்து அம்பதி ராயுடு சதம் அடித்ததுடன், தனது அணியை பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.
    புனேயில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #CSKvSRH
    சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து தவான் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 141 ரன்னாக இருக்கும்போது தவான் 49 பந்தில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் 39 பந்தில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது.



    அடுத்து வந்த மணிஷ் பாண்டே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிராக டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #CSKvSRH
    ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. டோனி, 6. வெயின் பிராவோ, 7. ஜடேஜா, 8. டேவிட் வில்லே, 9. ஹர்பஜன் சிங், 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.



    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. தவான், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. சாகிப் அல் ஹசன், 6. தீபக் ஹூடா, 7. கோஸ்வாமி, 8. ரஷித் கான், 9. புவனேஸ்வர் குமார், 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் ஷர்மா.
    ×