என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cuba"
- நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது.
- ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கி.மீட்டர் தொலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது. மேலும் ஹோல்யின், குவான்ட்னாமோ போன்ற நகரிங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பிலோன் என்ற சிறிய கிராமத்தில் உள்ள வீடுகளில் பாதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து சிலமணி நேரத்தில் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த புதன்கிழமை ரபேல் புயல் வடக்கு கியூபாவை கடுமையாக தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் கியூபாவை தாக்கியுள்ளது.
அக்டோபர் மாதம் இறுதியில் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் மக்கள் இருளில் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் அன்டோனியோ குட்டரெஸ்.
- இந்த நிலையம் சேதமடைந்ததால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
ஹவானா:
தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது.
பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் செயல்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து, அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான அன்டோனியோ குட்டோரஸ், தன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
சமீபத்தில் வீசிய மில்டன் சூறாவளி காரணத்தால் குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டதால், போக்குவரத்து சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயலிழந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின. இணையதள சேவையும் பாதிக்கப்பட்டதால், கியூபா மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.
பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இரவில் செயல்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கலாசார மையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் ஹவானாவில் அனைத்து வர்த்தகங்களும் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டன. உணவு, எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மின் தடை அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
- பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
- 25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.
இது இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.456க்கு விற்பனையாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்