என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cultural Competitions"
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கலாசார போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
- தொடர்ந்து வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலும் கலாசார போட்டிகள் நடைபெறுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கலாசார போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார்.
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், 'மாணவர்கள் தங்களது திறமைகளை கண்டறிந்து அதனை வளர்த்து கொள்வதற்கு இதுபோன்ற கலாசார போட்டிகளில் பங்கேற்க வேண்டும்' என்று கூறினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெல்வதற்கான வழிமுறைகளையும் விளக்கி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். தொடர்ந்து வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையிலும் கலாசார போட்டிகள் நடைபெறுகிறது.
- திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
- பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
திருப்பூர் :
இக்னீஷியா என்கிற பெயரில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான போட்டி தொடங்கியுள்ளது.
இதனை அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்பேரல் பேஷன் டிசைன் துறை தலைவர் அருந்ததிகோஷல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், வாழ்த்தி பேசினார். பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் முக ஓவியம், சிகை அலங்காரம், காய், பழங்களில் அலங்காரம் செய்தல், படத்தொகுப்பு, ஓவியம், மின்னணு கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு, கழிவு பொருட்களில் கலை பொருட்கள் தயாரிப்பு, மெஹந்தி, நகத்தில் ஓவியம் தீட்டுதல், விளம்பர படம், குறும்படம் தயாரிப்பு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.2-ம் நாள் பேஷன் ஷோ, குழு நடனம், தனிநபர் நடன போட்டிகள் நடைபெற்றன.
அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.
திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாய்ப்பாட்டிசை (செவ்வியல்), வாய்ப்பாட்டிசை, கருவி இசை (தாள வாத்தியம்), கருவி இசை (மெல்லிசை), நடனம் (செவ்வியல்), பாராம்பரிய நாட்டுப்புறக்கலை, காட்சிக்கலை (2டி), காட்சிக்கலை, மூன்று பரிமாணங்கள் (3டி), ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம், 430 பேர் பங்கேற்றனர். இறுதிநாளன்று நடனம் மற்றும் நாடகம் போட்டி நடந்தது.பாரம்பரியம் மற்றும் கிராமிய நடனத்தில் 120 பேரும், நாடகத்தில் 35 பேரும் பங்கேற்றனர்.
- ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடந்தன.
- அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் விவேகானந்த கேந்திரமும், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான நகர்ப்புறப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கேந்திர கிளை தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். கிளை பொருளாளரும். தலைமையாசிரியருமான ரமேஷ் வரவேற்றார். விவேகானந்த கேந்திர மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார்.
இதில் 32 பள்ளிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் கே.ஆர்.விஸ்வநாதன், தங்கமயில் ஜூவல்லரி மேலாளர் பாலாஜி, பாபு ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். முதலிடம் பிடித்த மாணவர்கள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருக்கும் 2 நாள் முகாமில் கலந்துகொண்டு மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, ராகஜோதி, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்