என் மலர்
நீங்கள் தேடியது "Curd Idly"
- இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.
தேவையானவை:
இட்லி மாவு - 2 கப்
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
முந்திரிப்பருப்பு - 6
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.
* அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.
* பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.
* அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.