search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "curiosity rover"

    • ரோவர் அனுப்பிய முதல் வீடியோ என சுமார் 03:03 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோ பரவியது
    • கியூரியாசிட்டி ரோவரை அட்லஸ் வி-451 ராக்கெட்டில் 2011 நவம்பரில் அனுப்பியது

    இந்தியா கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திரயான்-3, ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவ மேற்பரப்பை தொட்டது.

    இதில் உள்ள "விக்ரம்" எனும் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து "பிரக்யான்" எனும் ரோவர் வாகனம் கீழிறங்கியது. திட்டமிட்டபடி பிரக்யான் ரோவர், நிலா குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பூமிக்கு அனுப்பும்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் நிலவிலிருந்து ரோவர் அனுப்பிய முதல் வீடியோ என சுமார் 03:03 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோ பரவியது. பாறை நிறைந்த சாம்பல் நிற மேற்பரப்பை காட்டிய இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர்.

    ஆனால் இதனை ஆய்வு செய்த போது, இந்த வைரல் வீடியோவின் 02:40 நிமிடத்தின் போது "நாசா" (NASA) மற்றும் "மார்ஸ்" (செவ்வாய் கிரகம்) எனும் வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனை மேலும் ஆய்வு செய்ததில், செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவின் நாசா எனும் தேசிய வானியல் மற்றும் விண்வெளி அமைப்பு, அட்லஸ் வி-451 எனும் ராக்கெட்டில் 2011 நவம்பர் 26 அன்று அனுப்பி வைத்த விண்கலன், செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்ட் 5, 2012 அன்று தரையிறங்கியதும் அதன் ரோவர் வாகனமான, கியூரியாசிட்டி (Curiosity), தனது மாஸ்ட்-காம் (Mastcam) கேமரா மூலம் எடுத்து அனுப்பிய வீடியோ இது என தெரிய வந்துள்ளது.

    இந்த வீடியோவில் காணப்படும் சாம்பல் நிறமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தருகின்ற தகவல்கள் அனைத்தையும் உண்மை என நம்புவது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயின் பரப்பில் களிமண் கனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.
    செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம், கடந்த மே 12ஆம் தேதி, மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி, கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டுள்ளது. 

    இதை செல்ஃபி படமாக எடுத்தும் கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது. அது துளையிட்ட இடங்களில் களிமண் கனிமங்கள் அதிக அளவில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உயிர்களுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும். அந்த வகையில், பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கலாம். இதனை உறுதி செய்வதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளது.
    செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். #Curiosity #NASA
    நியூயார்க்:

    பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 

    அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது. 

    350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு செவ்வாயில் ஆகஸ்ட் 6, 2012 அன்று வெற்றிகரமாக செவ்வாயில்  தரையிறங்கிய கியூரியாசிட்டி, மொத்த பணியில் 23 சதவிகிதத்தை முடித்துள்ளது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கியூரியாசிட்டி இயக்கத்தை நிறுத்தியுள்ளது. 

    இதனை, சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும், விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 
    செவ்வாய் கிரகத்தில் கடந்த ஒரு வாரமாக வீசி வரும் மாசு கலந்து புழுதி புயலினால் ஏற்பட்ட மாற்றங்களை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக சமீபத்தில் நாசா தகவல் அறிவித்தது. இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்திருந்தது.

    இதனிடையே கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தின் செயல்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.



    இந்நிலையில், புழுதி புயலின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் நிறமாக இருந்து பகுதிகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover
    செவ்வாய் கிரகத்தில் விரைவில் வீச இருக்கும் மாசு கலந்து புழுதி புயலினால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இந்த புயல் வீசவுள்ளது. சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது.



    இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover
    ×