search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "curry leaves rice"

    கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் நல்லது. இன்று எளிய முறையில் வரகு அரிசியில் கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி -100 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து பொடிக்க :

    உளுந்து - 20 கிராம்
    கடலை பருப்பு - 20 கிராம்
    மிளகு - 5 கிராம்
    சீரகம் - 5 கிராம்
    வெந்தயம் - 5 கிராம்
    கொத்துமல்லி - 30 கிராம்
    கறிவேப்பிலை - 50 கிராம்
    காய்ந்த மிளகாய் - 3

    தாளிக்க :

    கடுகு - 5 கிராம்
    பெருங்காய தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வரகு அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.

    வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, உதிரியாக வடித்த சாதம், அரைத்த பொடி சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வரகு கறிவேப்பிலை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×