search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber Attack"

    • வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
    • தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்.

    இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ஒட்டி, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான சைபர் தாக்கதலுக்கு ஆளாகி உள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் போர்ட்டலான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் உள்கட்டமைப்பு மீது வெளிநாட்டில் இருந்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா சகரோவா தெரிவித்துள்ளார்.

    • Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
    • பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் Crowdstrike நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    இது சைபர் தாக்குதலோ, பாதுகாப்பு குளறுபடியோ அல்ல. Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

    பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    Mac மற்றும் Linux பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படவில்லை. Crowdstrike இணையதளத்தில் தொடர்ச்சியாக அப்டேட்டுகள் வழங்கப்படும்.

    Crowdstrike வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை என சீனா திட்டவட்டமாக கூறி விட்டது
    • சீனாவில் இருந்து தினமும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடப்பதாக தைவான் கூறியது

    செமிகண்டக்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு, தைவான் (Taiwan).

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான், தன்னை சுயாட்சி பெற்ற தனி நாடாக அறிவித்து கொண்டாலும், அதை ஏற்க மறுக்கும் சீனா, அந்நாட்டை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து அதன் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஆனால், தைவானின் சுயாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.

    சீனாவுடன் இது குறித்து அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடந்த ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என திட்டவட்டமாக சீனா தெரிவித்தது.

    இதையடுத்து எப்போது வேண்டுமானாலும், சீனா தைவானை ஆக்ரமிக்கலாம் எனும் அச்சம் தைவான் நாட்டில் தோன்றியுள்ளது.

    இதை தொடர்ந்து பல மக்கள் தங்கள் வெளியுலக தொடர்புகளை குறைத்து கொண்டுள்ளனர். அலுவலகம் செல்ல தயக்கம் காட்டி பலர், வீட்டிலிருந்தே பணிபுரிய தொடங்கி உள்ளனர். இணயவழி செயல்பாடுகள் குறைந்துள்ளதால், வங்கி சேவைகள் முடங்கி விட்டது.

    ராணுவ தாக்குதல் மட்டுமின்றி இணைய வழியாகவும் சீனாவால் தாக்கப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாக தைவான் அஞ்சுகிறது. இதனால் தைவானின் ராணுவ கட்டமைப்புகளில் மென்பொருள் பாதுகாப்பை அந்நாடு வலுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

    தினந்தோறும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் சீனாவினால் தைவான் நாட்டின் தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் நிதித்துறை கட்டமைப்புகள் மீது நடத்தப்படுவதாக தைவான் அரசு தெரிவித்தது.

    சீனாவிற்கு வெளியிலிருந்து இயங்கும் சீன சைபர் தாக்குதல் குழுவான "ஃப்ளாக்ஸ் டைஃபூன்" (Flax Typhoon) தைவான் நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பை இணையவழியாக ஆக்ரமிக்க முயல்வதாக கடந்த வருடமே, மைக்ரோசாப்ட், எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சைபர் தாக்குதல் மூலம் ஆஸ்பத்திரிகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் ஆப்லைனில் வைக்கப்பட்டது.
    • சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகள் மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

    கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது.

    இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் முடங்கியது. இதையடுத்து மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகள் நிறுத்தப்பட்டன. சில அவசர அறைகள் மூடப்பட்டன.

    சைபர் தாக்குதல் மூலம் ஆஸ்பத்திரிகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் ஆப்லைனில் வைக்கப்பட்டது. இதையடுத்து சைபர் தாக்குதலில் இருந்த கணினி அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சைபர் தாக்குதல் பற்றி அறிந்ததும் கணினி அமைப்புகள் ஆப்லைனில் வைக்கப்பட்டது. சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் விசாரணையை நடத்தி வருகிறோம்.

    நோயாளிகளின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். விரைவாக இயல்பான செயல்பாடுகளுக்கு திரும்புவதற்கு செயல்படுகிறோம்.

    சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகள் மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சைபர் தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    ×