search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyclone fani"

    பானி புயலின் கோரத்தாண்டவத்தால் சின்னாபின்னமான ஒடிசா மாநிலத்தில் புயலின் தாக்கத்தினால் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.

    நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன் எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். விழுந்த மரங்களுக்கு பதிலாக போர்க்கால அடிப்படையில் புதிய மரங்கள் நடப்படும் என அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பானி புயலின் தாக்கத்துக்கு  மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய பானி புயல், புவனேஸ்வரில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் சாய்த்துவிட்டது.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 3-ம் தேதி பானி புயல் தாக்கியது. புயலின் வேகம் மற்றும் புயல் கரை கடக்கும் பகுதிகளை முன்கூட்டியே கணித்து வானிலை மையம் எச்சரித்ததால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் புயல் கரை கடந்தபோது, பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 

    ஆனால், அசுர வேகத்தில் வீசிய காற்று கடலோர பகுதிகளை துவம்சம் செய்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் புவனேஸ்வரில் மட்டும் பச்சைப் பசேல் என வளர்ந்து, தூய காற்றை வழங்கி வந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துவிட்டன. நகரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. அவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன. 

    20 வருடங்களுக்கும் மேலாக பராமரித்து வளர்த்த மரங்களுடன் கொண்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பு, இப்போது சுக்கு நூறாக நொறுங்கிப்போய் உள்ளது. அந்த இடத்தில் மீண்டும் மரங்களை வளர்த்து, அவற்றின் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கும் பாக்கியத்தை பெறுவதற்கு இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும். சாலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. 

    இதுபற்றி வனத்துறை அதிகாரி அசோக் மிஸ்ரா கூறுகையில், “சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மரங்களை எங்கள் குழந்தைகள் போன்று வளர்த்து பராமரித்தோம். புயலால் கிளைகள் முறிந்து சேதமடைந்த மரங்களை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். 40 பேர் கொண்ட எங்கள் குழுவினர், கடந்த 4 நாட்களில் மட்டும் 800 மரக்கன்றுகள் நட்டுள்ளனர். புயலில் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை இப்போது மதிப்பிட இயலாது. ஒட்டுமொத்த பசுமையும் அழிந்துவிட்டது” என்றார். 
    புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் மந்திரி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani
    புவனேஷ்வர்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு அம்மாநில ஐஏஎஸ்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் முதல் மந்திரி நிவாரண நிதியில் அளிக்க உள்ளோம் என ஐ.ஏ.எஸ். சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #CycloneFani
    ஒடிசா மாநிலத்தை அசுர வேகத்தில் தாக்கி துவம்சம் செய்த பானி புயலின் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. #Fanitoll #CycloneFani
    புவனேஸ்வர்: 

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.  அப்போது 175 முதல் 230 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.  வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    இதற்கிடையே, பானி புயலின் தாக்கத்துக்கு 29 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில், பானி புயல் தாக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 41 ஆக அதிகரித்துள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த 3 தினங்களுக்குள் நிவாரண பொருள்களை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Fanitoll #CycloneFani
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு கேரளா அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #CycloneFani #PinarayiVijayan
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. #CycloneFani #AdaniGroup
    புவனேஷ்வர்:

    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.



    அதானி குழுமம் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல்வேறு சுரங்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #CycloneFani #AdaniGroup
    பானிப்புயல் உருவாவதையொட்டி கொடைக்கானலில் 2 நாட்களுக்கு சுற்றுலா இடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #CycloneFani #TNRains

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய சுற்றுலா இடங்களான குணாகுகை, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், பைன்பாரஸ்ட் என 12 மைல் சுற்றளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இயற்கை எழிலுடன் உள்ளது.

    மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். இவை அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

    இது பானிப்புயலாக மாறி வருகிற 29-ந்தேதி வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா வழியாக கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கடந்த கஜாபுயலின்போது கொடைக்கானல் மற்றும் மேல்மலை, கீழ்மலைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்துவிழுந்து இயல்புநிலை திரும்ப ஒரு மாதத்திற்கும் மேலானது. எனவே தற்போது உருவாகி உள்ள பானிப்புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி 29,30 ஆகிய 2 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். #CycloneFani #TNRains

    வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று, 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #TNRains #IMD
    புதுடெல்லி:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.



    இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30-ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #CycloneFani #TNRains #IMD
    ×