என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cyclonic winds"
- முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.
- நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.
ராமேசுவரம்:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்குள் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை மழையும் சரிவர பெய்யாதததால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பரவலாக கோடை மழை வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்தது. சில இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று மாலை ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. இந்த கோடை மழை அவ்வப்போது நின்று நின்று பெய்தது.
பின்னர் நள்ளிரவு முதல் விடிய விடிய ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணிமண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.
மழை காரணமாக நேற்று இரவு ராமேசுவரம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் ஆன பின்னும் மின்சாரம் வரவில்லை. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதியடைந்தனர். இன்று காலை 7 மணிக்கு ராமேசுவரத்திற்கு மின்விநியோகம் செய்யப்பட்டது.
ராமேசுவரம் மன்னார்வளைகுடா, பாக்நீரினை கடலில் 55 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்து மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெய்லானி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ராமேசுவரம்,பாம்பன்,தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டியில் மழை பெய்தது. மதுரை நகரில் நேற்று மாலை குளிர்ந்த காற்றும் வீசியது. அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் மழை பெய்தது.
பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், கைத்தறிநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த வாரம் முழுவதும் 105 டிகிரிக்கு வெயில் பதிவாகி வந்த நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக மதுரை நகரில் மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
- தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அந்த மான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வருகிற 29-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந் தேதி அன்று தாழ்வு மண்டலமாக மாறுவதால அன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அது தாழ்வு மண்டலமாக மாறிய பிறகே தெரியவரும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும். தமிழக பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது.
- நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
அவினாசி :
கடந்த மாதம் 29 ந்தேதி உடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது. பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்தது.
கடந்த 1 ந்தேதி பள்ளிகள் செயல்பட இருந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காரணமாகபள்ளிகள் செயல்படும் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை அவினாசி பகுதியில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. இதையடுத்து கருமேகங்கள் சூழ்ந்தது. நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது. சில இடங்களில் ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது.
- திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் மாநகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது. சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள வீதியில் சாலையோர மரத்துக்கு அடியில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்து கார் மேல் விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமானது.
உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு உதவி மாவட்ட அதிகாரி வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி காரை அப்புறப்படுத்தினார்கள். இதுபோல் பி.என்.ரோட்டில் சரிந்த மரங்களால் போக்குகுவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரங்களையும் வெட்டி அகற்றினார்கள். இதுபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதிகளில் சாலையோரம் நின்ற மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணியில் இருந்து மழை கொட்டியது. அத்துடன் காற்றும் பலமாக வீசியது. இதனால் ஆங்காங்கே உள்ள குட்டைகளில் மழைநீர் நிரம்பியது. தொடர்ந்து குளிர் காற்றும் இதமாக வீசியது.
- இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
- பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலை யில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தியூர்-பவானி சாலை முருகன் கிணறு அருகில் சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனையடுத்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் காரணமாக மின்தடையும் ஏற்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பர்கூர் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்