என் மலர்
நீங்கள் தேடியது "Dairy Milk"
- மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பர வீடியோ வைரலாகியுள்ளது.
- தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது.
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையின் மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் தெற்கு Vs வடக்கு மொழி பிரச்சனையை மையப்படுத்தி கேட்பரி டைரி மில்க் சாக்லேட் நிறுவனம் இந்தியில் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த விளம்பரத்தில், இந்தி பேசும் பெண்கள் மொட்டைமாடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில் குடியேறியுள்ள சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அவர்களுடன் இணைகிறார். அப்போது அந்த பெண்கள் இந்தியில் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் பெண் திணறுகிறார். இதனை உணர்ந்த ஒரு இந்தி பேசும் பெண் தனது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி உரையாடுகிறாள்.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பரம் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. 1967 இல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணாதுரை, 1968 ஆம் ஆண்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.
- நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன்.
- என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டில் புழு உள்ளதாக மகாராஷ்டிரா பிரதேச இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளர் அக்ஷய் ஜெயின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பதிவில், "என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்தது. நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இது மிக மோசமான அனுபவம். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவில் கேட்பெரி நிறுவனத்தை அவர் டேக் செய்திருந்தார்.
இந்நிலையில், அவரது குற்றச்சாட்டிற்கு கேட்பெரி நிறுவனம் பதில் அளித்துள்ளது. கேட்பரி நிறுவனத்தின் பதிவில், "உங்களின் மோசமான அனுபவத்திற்கு வருந்துகிறோம். உங்களின் புகாரை எழுத்துபூர்வமாக அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
