என் மலர்
நீங்கள் தேடியது "DAKSHIN BHARAT"
- ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வது தொடர்பாக இந்த குழு பிரச்சாரம் மேற்கொள்கிறது.
- சென்னையை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ராணுவ குழு பயணம்
ராணுவ பீரங்கி மைய படை பிரிவுக்கு ஐதராபாத்தில் இரண்டாவது பயிற்சி மையம் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் தலைவராக பிரிகேடியர் ஜெகதீப் யாதவ் உள்ளார். கோல்கொண்டா கோட்டையில் செயல்படும் இந்த மையத்தை சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் தென்னிந்திய முழுவதும் இருசக்கர வாகனங்களில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தங்களது பயணத்தின்போது இளைஞர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் ராணுவத்தில் சேர்வது தொடர்பான ஊக்கமளிக்கும் விளக்கங்களை அவர்கள் வழங்கி வருகின்றனர். மேலும் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவத்தினரின் மனைவியர் உள்ளிட்டோரையும் சந்திக்கும் அவர்கள் குறைகளை கேட்டறிகின்றனர்.
ஐதராபாத்தில் இருந்து அக்டோர் 23ம் தேதி இந்த பயணத்தை தொடங்கிய ராணுவ வீரர்கள் குழுவினர், தனுஷ்கோடி வரை சென்ற பின்னர், மீண்டும் திருச்சி, புதுச்சேரி வழியாக நேற்று சென்னை வந்தது. சென்னையில் உள்ள தென்மண்டல ராணுவ தலைமையகத்தில் ராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழுவினர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். தென்மண்டல தக்சின் பாரத் பகுதி ராணுவ தலைவர் மேஜர் ஜெனரல் சுக்ரிதி சிங் தஹியா கொடி அசைத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்.